‘என் உயிர்த் தோழன்’ பாபு மரணம் : ஒரே தவறு 30 ஆண்டுகள் படுக்கையில் வாழ்க்கை !!

0
203
#image_title

‘என் உயிர்த் தோழன்’ பாபு மரணம் : ஒரே தவறு 30 ஆண்டுகள் படுக்கையில் வாழ்க்கை

பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்தவர். 1990ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘என் உயிர்த் தோழன்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அப்படத்திற்குக் கதை, வசனமும் எழுதியவரும் பாபு தான்.

ஒரு அடிமட்ட அரசியல் தொண்டனின் வாழ்க்கை எப்படிச் சீரழிகிறது என்பதை விளக்கிய ஒரு படம். “என் உயிர்த் தோழன்” படம் வெளியான போதே பெரும் சர்ச்சை வெடித்தது. இது திமுக அரசு நேரடியாக விமர்சிப்பதாகக் குற்றச்சாட்டி எழுந்தது. இயக்குநர் பாரதிராஜா அவர்களும், வெளிப்படையாக இது அரசியல் படம் தான், இதற்காகத் தான் படம் எடுத்தேன் என்றும் பத்திரிகை பேட்டி ஒன்றிலும் கூறியுள்ளார்.

படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. காரணம் இளையராஜா அவர்களின் இசை தான். இளையராஜா இசையில், “ஏ இராசாத்தி ரோசாப்பூ வா வா’, மற்றும் “குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம் கோபுரம் ஆனதென்ன” பாடல்கள் மறக்க முடியாதவை.

புகழ் உச்சிக்குச் சென்ற பாபு, ‘மனசார வாழ்த்துங்களேன்’ என்ற படத்தில் நடித்த போது டூப் போட மறுத்து மேலிருந்து கீழே குதித்து, முதுகெலும்பை உடைத்துக் கொண்டார். கடந்த 30 ஆண்டுகளாக படுத்தப் படுக்கையாக இருந்தவர்.

ஒரு சிறந்த இயக்குநராக, நடிகராக, வசனகர்த்தாவாக வந்திருக்க வேண்டியவர், ஒரு அசாத்திய துணிச்சலில் தனது வாழ்க்கையை இழந்தார். 30 ஆண்டுகளுக்கு மேலாகப் படுத்தப்படையாகக் கிடந்த பாபு இன்று உடல்நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.

திரைத்துறையில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு தவறுகளும் மிகப்பெரிய பின்விளைவை ஏற்படுத்தக் கூடும். திரைத்துறையில் வளர்ந்து வரும் பெரும் நட்சத்திரங்களுக்கு மறைந்து பாபு அவர்களும் ஒரு உதாரணம்தான்.

Previous articleஉலகக் கோப்பை கிரிக்கெட்டை பார்க்க ரஜினிகாந்த் அவர்களுக்கு கோல்டன் டிக்கெட்!!! பிசிசிஐ பொதுச்செயலாளர் ஜெய்ஷா அவர்கள் வழங்கினார்!!! 
Next articleவசூலில் சாதனை படைத்த பாரதிராஜாவின் 10 படங்கள்!!