உலகக் கோப்பை கிரிக்கெட்டை பார்க்க ரஜினிகாந்த் அவர்களுக்கு கோல்டன் டிக்கெட்!!! பிசிசிஐ பொதுச்செயலாளர் ஜெய்ஷா அவர்கள் வழங்கினார்!!! 

உலகக் கோப்பை கிரிக்கெட்டை பார்க்க ரஜினிகாந்த் அவர்களுக்கு கோல்டன் டிக்கெட்!!! பிசிசிஐ பொதுச்செயலாளர் ஜெய்ஷா அவர்கள் வழங்கினார்!!!

உலகக் கோப்பை கிரிக்கெட் தேடலை காண்பதற்கு நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு கோல்டன் டிக்கெட்டை பிசிசிஐ பொதுச்செயலாளர் ஜெய்ஷா அவர்கள் வழங்கியுள்ளார்.

வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி முதல் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் உலகக் கோப்பை போட்டிகளை காண்பதற்கு இந்தியாவில் மிகப் பிரபலமாக இருக்கும் நபர்களுக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த கோல்டன் டிக்கெட்டை வைத்துள்ளவர்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் இலவசமாக காணலாம். அதுவும் விஐபி இருக்கையில் அமர்ந்து உலகக் கோப்பை தொடரின் ஒவ்வொரு போட்டியையும் கண்டுகளிக்கலாம்.

இதையடுத்து இந்த கோல்டன் டிக்கெட் முதலில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை பிசிசிஐ-யின் புதுச் செயலாளர் ஜெய்ஷா அவர்கள் சந்தித்தார். பின்பு நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு கோல்டன் டிக்கெட்டை ஜெய்ஷா அவர்கள் வழங்கினார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

இந்த கோல்டன் டிக்கெட் ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டதற்கு பின்னர் மேலும் பல பிரபலங்களுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.