வசூலில் சாதனை படைத்த பாரதிராஜாவின் 10 படங்கள்!!

0
80
#image_title

வசூலில் சாதனை படைத்த பாரதிராஜாவின் 10 படங்கள்!!

இயக்குநர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா அவர்கள் , ஏராளமான நடிகர்களுக்கு வாழ்க்கை கொடுத்தவர் என்று கூட கூறலாம்.இவரது படம் என்றாலே அதற்கு ஏராளமான எதிர்பார்ப்புகள் நிச்சயம் இருக்கும்.

அவ்வாறு இவர் படைத்த படங்களின் வசூல்சாதனைபடைத்த 10 திரைப்படங்களை தற்போது பார்ப்போம்.

முதலாவதாக 16வயதினிலே இந்த படம் அவரது முதல் திரைப்படமாகும். இந்த படத்தை 5 லட்சம் மதிப்பில் எடுத்திருப்பார். இந்த படமானது நல்ல வரவேற்பைப் பெற்றுக் கிட்டத் தட்ட 25 லட்சத்திற்கு மேல் வசூல் சாதனையைப் படைத்தது.

இரண்டாவதாகக் கிழக்கே போகும் ரயில். இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 5 கோடியே ஆகும். இந்த படத்தின் வசூல் மட்டும் 25 லட்சத்திற்கு மேல் சென்று ஒரு சாதனையைப் படைத்தது.

மூன்றாவதாகச் சிகப்பு ரோஜாக்கள். இந்த திரைப்படமானது கிட்டத் தட்ட 30 லட்சத்திற்கு மேல் வசூல் செய்த திரைப்படமாகும்.

நான்காவதாக புதிய வார்ப்புகள். இந்த திரைப்படத்தின் மொத்த செலவானது 6லட்சமாகும். இந்த படத்தின் வசூல் சாதனை மட்டும் 20 கோடிக்கு மேல் ஆகும்.

ஐந்தாவதாக அலைகள் ஓய்வதில்லை. இந்த திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 10 லட்சமாகும். ஆனால் இந்த திரைப்படமானது ஒரு நல்ல வசூல்தனை படத்தைத் திரைப்படமாகும். இது 40 லட்சம் மேல் வசூலித்த திரைப்படம்.

ஆறாவதாக டிக் டிக் டிக். இந்த திரைப்படத்தினை 18 லட்சம் செலவில் எடுத்தனர். இந்த திரைப்படமானது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுக் கிட்டத் தட்ட 80 லட்சம் வரை வசூல் செய்த ஒரு முக்கியமான திரைப்படமாகும்.

ஏழாவதாக மண்வாசனை திரைப்படம். இந்த திரைப்படத்தின் மொத்த மதிப்பு 17லட்சம் ஆகும். இந்த படமானது நல்ல வரவேற்பைப் பெற்றுக் கிட்டத் தட்ட 68 லட்சம் வசூல் சாதனையைப் படைத்தது.

எட்டாவதாகப் புதுமைப்பெண் இந்த திரைப்படமானது ஒரு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்த திரைப்படமாகும். இதனுடைய மொத்த மதிப்பு 18 லட்சமே ஆகும். ஆனால் இந்த திரைப்படத்தின் வசூல் கிட்டத் தட்ட 98 லட்சத்திற்கு மேல் ஆகும்.

ஒன்பதாவதாக ஒரு கைதியின் டைரி இந்த திரைப்படத்தினை 55 லட்சம் மதிப்பில் எடுத்திருப்பார். இந்த படத்தின் வசூல் மட்டும் கிட்டத் தட்ட இதுவரை காணாத ஒன்றாகத் திகழ்கிறது. இதனுடைய மொத்த வசூல் சாதனை 4 கோடிக்கு மேல் ஆகும்.

பத்தாவதாக முதல் மரியாதை.இந்த திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 75 லட்சம் ஆகும். இந்த திரைப்படமும் கோடிக்கணக்கில் அதாவது 5 கோடிக்கு மேல் வசூலித்த திரைப்படமாக இது திகழ்கிறது.

இயக்குநர் இமயத்தின் படங்கள் என்றால் அதனைச் சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வாறு அவர் இயக்கிய திரைப்படங்களின் பாதி படங்கள் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்த திரைப்படங்களே ஆகும்.

author avatar
CineDesk