பிசாசு 2 படத்துக்காக ஆண்ட்ரியாவின் நிர்வாணக் காட்சிகள் ஷூட் செய்யவே இல்லை… இயக்குனர் மிஷ்கின்!

0
170

பிசாசு 2 படத்துக்காக ஆண்ட்ரியாவின் நிர்வாணக் காட்சிகள் ஷூட் செய்யவே இல்லை… இயக்குனர் மிஷ்கின்!

இயக்குனர் மிஷ்கின் எழுதி இயக்கியுள்ள பிசாசு 2 திரைப்படத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார்.

இயக்குனர் மிஷ்கின் தற்போது பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். அதில் ஆண்ட்ரியா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்துக்கு இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். பூர்ணா, சந்தோஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்து கிராபிக்ஸ் உள்ளிட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது அந்த நாளில் ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது. அது சம்மந்தமான விளம்பரங்கள் எதையும் படக்குழு செய்யவில்லை.

இந்நிலையில் படத்தில் நடிகை ஆண்ட்ரியா 20 நிமிடம் அளவுக்கு நிர்வாணமாக நடித்துள்ளதாக சொல்லப்பட்டது. அந்த காட்சிகள் கதைக்கு முக்கியத்துவம் உள்ளது என்பதால் அதை படமாக்கியதாக இயக்குனர் மிஷ்கினே தெரிவித்திருந்தார். ஆனால் பின்னர் அந்த காட்சிகளை நீக்கிவிட்டதாகவும் ஒரு நேர்காணலில் கூறி இருந்தார். ஆனால் இப்போது அந்த காட்சிகளை படமாக்கவே இல்லை என்று கூறியுள்ளார்.

இது சம்மந்தமாக அவர் தற்போது அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் “நிர்வாணக் காட்சிகளை படமாக்கவே இல்லை. ஆண்ட்ரியாவின் நெருங்கிய நண்பரான புகைப்பட கலைஞர் ஒருவர் சில புகைப்படங்களை எடுத்தார். அதையும் நான் பார்க்காமலேயே அழித்துவிட்டேன். இப்போது என்படத்தை குழந்தைகளோடு பார்க்கலாம்” எனக் கூறியுள்ளார்.

Previous articleகுழந்தைக்காக ஐஸ் க்ரீம் ஆர்டர் செய்த நபருக்கு ‘ஆணுறையை’ டெலிவரி செய்த நிறுவனம்!
Next articleஇந்த 17 மாவட்டங்கள் மட்டும் உஷார்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை!