இந்த 17 மாவட்டங்கள் மட்டும் உஷார்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை!  

இந்த 17 மாவட்டங்கள் மட்டும் உஷார்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை!

தற்போது அனைத்து இடங்களிலும் பரவலாக கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இதனைதொடர்ந்து நேற்று பல இடங்களில் மழை அதிக அளவில் பெய்து அங்கங்கே நீர்நிலைகள் நிரம்பி வருகிறது.அந்த வகையில் தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்பட 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து  நீலகிரி, கோவை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.