நகைக்கு பதிலாக கற்களை வைத்து கொடுத்த மர்ம நபர்கள்! ஏமார்ந்து போன மூதாட்டி!
தஞ்சாவூர் மாவட்டம் ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரதின் மனைவி சரஸ்வதி (65). இவர் வெளியில் சென்று விட்டு ஏ ஓ ஏ நகரில் நடைமேடையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் சில மர்மநபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் மூதாட்டியை நிறுத்தி பேச்சு கொடுக்க ஆரம்பித்தனர்.
இந்த பகுதியில் வழக்கமாக வழிப்பறி திருட்டு போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழும் என்றும் அந்த மர்ம கும்பல் மூதாட்டியிடம் கூறியுள்ளனர். நீங்கள் அணிந்திருக்கும் நகைகளை அனைத்தும் எங்களிடம் கொடுத்தால் பாதுகாப்பாக பையில் வைத்து தருவதாகவும் கூறினார்கள்.
அந்த மர்மநபர்கள் கூறுவதை உண்மை தான் என நம்பிய சரஸ்வதி அவர் அணிந்திருந்த எட்டு பவுன் நகைகளை கழற்றி அந்த மர்மநபர்கள்களிடம் கொடுத்துள்ளார். சரஸ்வதி நகையை கொடுத்தவுடன் மர்மநபர்கள் அவர்கள் அந்த நகையை எடுத்துக் கொண்டு அதற்கு பதிலாக பையில் கற்களை வைத்து கொடுத்துள்ளனர்.
மேலும் அதனை அறியாத மூதாட்டி பையை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் சென்று பார்க்கும் பொழுது நகைகளுக்கு பதிலாக கற்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து தஞ்சை மாவட்ட போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.

