தஞ்சையில் அவமதிக்கப்பட்ட பெரியார் சிலை! கண்டுகொள்ளாத திராவிடர் கழகத்தினர்!

0
144

தந்தை பெரியார் அவர்களுக்கு ஒரு சில அவமதிப்பை சிலர் தொடர்ந்து செய்து வருகிறார்கள். காவிசாயம் பூசுவது, செருப்பு மாலை அணிவிப்பது, என்று கருத்தை கருத்தால் எதிர்கொள்ள தெரியாதவர்கள் இதுபோன்ற ஒரு சிலர் கீழ்த்தரமான செயல்பாடுகளில் ஈடுபட செய்கிறார்கள் என்பதே பெரியார் ஆதரவாளர்களின் கருத்தாக இருந்து வருகிறது.

இந்தநிலையில், தஞ்சை மாவட்டத்தில் பெரியார் மறுபடியும் அவமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த விவகாரம் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரத்தநாடு பாரதிதாசன் மகளிர் உறுப்பு கல்லூரி எதிரே பஸ் நிலையத்திற்கு செல்லும் வழியில் பெரியாரின் முழு உருவ சிலை இருக்கிறது.

அந்த சிலைக்கு நேற்று இரவு யாரோ ஒரு சில மர்ம நபர்கள் காவி நிற சால்வை அணிவித்து தலையில் குல்லா அணிந்து சென்று இருப்பதால் பரபரப்பு உண்டானது. இன்று காலை நடைபயிற்சி செய்தவர்கள் காவல் துறைக்கு இதுதொடர்பாக தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்.

அந்தப் பகுதியைச் சார்ந்த மக்களே ஒன்று சேர்ந்து காவி சால்வையை அகற்றி இருக்கிறார்கள். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.

இதுகுறித்து அந்தப் பகுதியில் சுற்றி வரும் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பிடித்து விசாரணை செய்து வருகிறார்கள்.இந்த சம்பவம் குறித்து திராவிடர் கழகத்தினர் புகார் எதுவும் இதுவரையில் தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

Previous articleஅமித்ஷாவிற்கு சவால் விட்ட நாராயணசாமி!
Next articleதடுப்பூசி செலுத்திய செவிலியரை கிண்டல் செய்த பிரதமர்! கலகலப்பான எய்ம்ஸ் மருத்துவமனை!