மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த சான்றிதல்களில் பெயர் மாற்றம்! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!

0
225
Name change in these certificates issued to students! Tamil Nadu government's action!
Name change in these certificates issued to students! Tamil Nadu government's action!

மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த சான்றிதல்களில் பெயர் மாற்றம்! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!

தற்பொழுது தான் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை முடிவுக்கு வந்து  பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்களும் தற்பொழுது நேரடி வகுப்பு மூலம் பாடங்களைக் கற்பித்து வருகின்றனர். மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை சமீபத்தில் செய்து வருகிறது. இந்த கொரோனா  தொற்றின் காரணமாக பல மாணவர்களிடம் ஸ்மார்ட்ஃபோன் இல்லாத காரணத்தினால் பாடங்களை கற்பிக்க முடியவில்லை.

இதனால் பல மாணவர்கள் பாட ரீதியாக எந்த ஒரு முன்னேற்றமும் இன்றி காணப்படுகின்றனர். அவர்களெல்லாம் முன்பை போல படிக்க வேண்டும் என்று எண்ணி தமிழக அரசு ,வீடு தேடி கல்வி திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. தற்பொழுது அதன் மூலம் பல ஆயிரம் கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். அதற்கு அடுத்தபடியாக தமிழ் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடையும் அதிகமாக தமிழக அரசு வழங்கியுள்ளது. மேலும் நமது தமிழ் மொழியை மாணவர்களிடம் ஊக்குவிக்கும் வகையில் இனி அனைத்து தொடக்க கல்வி பயிலும் மாணவர்கள் முதல் கல்லூரி பயிலும் மாணவர்கள் வரை அனைவரும் பின்பற்றும் வகையில் ஓர் உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.

மாணவர்கள் தங்களது பெயரை தமிழில் எழுதும் பொழுது அவரவர் இன்ஷியலை ஆங்கிலத்தில் எழுதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனைத் தவிர்க்க இனி தொடக்கக் கல்வி முதல் கல்லூரி வரை அனைத்து இடங்களிலும் மாணவர்களின் பெயரின் முன்பு இன்ஷியலையும் தமிழிலேயே எழுத வேண்டும் எனக் கூறியுள்ளனர். இதனை கடை பிடிக்கும் விதமாக முதலில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் வருகை பதிவேடு, சான்றிதழ் வழங்குதல் குறிப்பாக கல்லூரிகளில் கல்லூரி படிப்பை முடித்து வழங்கப்படும் சான்றிதழ் என அனைத்திலும் தமிழ் பெயரை எழுத வேண்டும் என கூறியுள்ளனர்.

அவ்வாறு எழுதும் பொழுது அவர்களின் பெயருக்கு முன் எழுதப்படும் இன்ஷியலையும் தமிழிலேயே எழுத வேண்டும் என தெரிவித்துள்ளனர். மாணவர்களும் தங்களது பெயரை எழுதும் பொழுது இதனை பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளனர். எனவே வரும் காலங்களில் பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகம் இதனை பின்பற்ற வேண்டும் என்ற உத்தரவிட்டுள்ளனர்.

Previous articleரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
Next articleஏமாற்றிய காதலிக்கு தரமான பரிசை கொடுத்த காதலன்