“நம்ம சென்னை” செல்பி பாய்ண்ட் இடமாற்றம்!! இப்போது எங்கே இருக்கிறது தெரியுமா!!

Photo of author

By CineDesk

“நம்ம சென்னை” செல்பி பாய்ண்ட் இடமாற்றம்!! இப்போது எங்கே இருக்கிறது தெரியுமா!!

சென்னை என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது மெரினா கடற்கரை தான். இங்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். மேலும், பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் கூட இந்த கடற்கரையை பார்க்க ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

எனவே, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மெரினா கடற்கரையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கே வருகின்ற மக்களுக்கு புகைப்படம் எடுக்க எதுவாக செல்பி பாய்ண்ட் ஒன்று அமைக்கப்பட்டது.

தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் “நம்ம சென்னை” என்ற செல்பி பாய்ண்ட் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டது. இது காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரிக்கு எதிரே அமைக்கப்பட்டுள்ளது.

இதை அமைப்பதற்கு மொத்தம் 22  லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டது. பத்து அடி உயரத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த செல்பி பாய்ண்ட் யில் மக்கள் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்து செல்வார்கள்.

ஆனால் தற்போது மெரினா கடற்கரையில் இருந்து இந்த செல்பி பாய்ண்ட் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது மெரினா கடற்கரையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் தள்ளி பாரத் சாரண சாரணியர் அலுவலகத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ளது.

சென்னையில் மெட்ரோ பணிகள் தீவிரமாக நடந்து வருவதால் இந்த செல்பி பாய்ண்ட் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயில் பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில்,

சென்னையில் உள்ள மாதவரம்- சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம்- பூந்த்மலை மற்றும் மாதவரம்- சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் மொத்தம் 128  ரயில் நிலையங்கள் பிரம்மாண்டமாக கொண்டு வரப்பட உள்ளது.இந்த மெட்ரோ திட்டம் ரூபாய் 63 ஆயிரத்து 245 கோடி மதிப்பீட்டில் கொண்டு வரப்பட உள்ளது.

இந்த பணிகள் வேகமாக நடந்து முடிந்த பிறகு, மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனவும், இதனாலேயே நம்ம சென்னை செல்பி பாய்ண்ட் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.