இன்னும் ஆறே மாதங்களில் பெட்ரோல் விலை ரூபாய் 150 தொடும் நிலைமையை பிரதமர் மோடி உருவாக்குவார் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளது, பெட்ரோல் விலை ரூபாய் 100 தொடும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தோம். அதேபோலவே தற்போது பெட்ரோல் விலை ரூபாய் 100 தாண்டியுள்ளது. இன்னும் ஆறு மாதங்களில் பெட்ரோல் விலை ரூபாய் 150, சமையல் கேஸ் சிலிண்டர் ரூபாய் 1250, டீசல் ரூபாய் 140 என அதிகரித்துவிடும்.
பொதுமக்கள் பிரதமர் மோடி அரசு புரிந்து கொள்ள வேண்டும். ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.150 தாண்டும் என்ற நிலைமையை மோடி உருவாக்குவார் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரசார் பாரதி அமைப்பானது அரசியல் நிர்ணய சபை விவாதங்கள் வரலாற்றின் சாட்சியங்கள் என்ற ஆவணங்களை பெட்டகத்தில் வைத்துள்ளனர்.அதை வெளியில் ஏலம் விட நடவடிக்கை இருக்கிறார்கள். இது மிகப்பெரிய தவறு என அவர் கூறியுள்ளார்.
சட்டப்பேரவை முடிந்து இரண்டு மாதங்கள் ஆகியும் எந்த ஒரு கோப்பும் அதிகாரிகளிடமிருந்து வரவில்லை அறிவிப்புகளும் நடைமுறைக்கு வரவில்லை என நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் விதிமுறைகள் வந்துள்ளதால் திட்டங்களை நடைமுறைப்படுத்தவில்லை என்ற கருத்து உண்மை இல்லை அறிவித்த திட்டங்களை நடைமுறைப்படுத்த தடை எதுவும் இல்லை என அவர் கூறியுள்ளார்.
மேலும், மக்களை மாநில அரசு ஏமாற்றக்கூடாது. அரசு அறிவித்த திட்டங்களை நடைமுறைப்படுத்த எந்த நடவடிக்கையும் இதுவரை முதல்வரால் எடுக்கப்படவில்லை. புதுச்சேரி அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து உள்ளது எந்த வேலையும் நடக்கவில்லை என்று நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்..