அனைத்து நிறுவனங்களுக்கும் சலுகை அளிக்கும் நாசா

0
121

எந்த நிறுவனம் நிலவில் உள்ள வளங்களைக் கொண்டு வருகிறதோ அந்த நிறுவனத்திற்கு தகுந்த தொகை வழங்கப்படும் என நாசா எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையம் கூறியுள்ளது. நிலவில் இருக்கும் பாறைக் கற்கள், மண் , இதர கனிமப் பொருள்களை வாங்குவதற்கு நிலையம் திட்டமிட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் நிலவிற்கு இயந்திர மனிதக் கருவிகளை அனுப்பி அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள ஊக்குவிப்பது திட்டத்தின் நோக்கம். நாசாவின் Artemis திட்டத்தின் கீழ், 2024ஆம் ஆண்டிற்குள், அமெரிக்க விண்வெளி வீரர்கள் மீண்டும் நிலவில் கால்பதிக்கவேண்டும் என்பது இலக்கு. அப்போது நிலவிலிருந்து மேலும் வளங்களைத் திரட்ட வாய்ப்புள்ளதாக நாசா தெரிவித்தது.

Previous articleமிகுந்த பாதிப்புக்குள்ளாகும் இந்த மூன்று நாடுகள்
Next articleதமிழகத்தில் 5 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: இன்றைய நிலவரம்!!