செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்பட்ட நாசா விண்கலம்

Photo of author

By Parthipan K

அமெரிக்காவின் ரோவர் மற்றும் ஹெலிகாப்டருடன் நாசா விண்கலம் செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக விண்கலம் ஏவப்பட்டது. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பட்டுள்ள ரோவர் விண்கலத்திற்கு ‘பெர்சிசவரன்ஸ்’ என்று நாசா, பெயரிட்டுள்ளது. இந்த விண்கலம் பிப்ரவரி மாதத்தில் செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என தகவல் தெரிவிக்கின்றது. இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை  ஒரு வருடம் வரை ஆய்வு செய்யும். செவ்வாய் கிரகத்தில் ஒரு வருடம் எனில் பூமியில் 687 நாட்களாகும்.

இந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தின் பழைமையான தன்மையையும், செவ்வாயில் மனிதன் வாழ்வதன் சாத்தியக்கூறுகள் பற்றியும் ஆய்வுகளையும்  சேகரிப்பதோடு மட்டும் அல்லாமல், அங்கிருந்து, பாறை மற்றும் மண் ஆகியவற்றின் மாதிரிகளையும் கொண்டுவரும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. இது மனிதகுலத்தின் விண்வெளி ஆய்வு முயற்சிகளுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் ஒரு விண்வெளி பயணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.