இந்திய பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் பரபரப்பு?

இந்திய பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் பரபரப்பு?

எல்லையில் இந்தியா பதிலடி 2 பாகிஸ்தான் வீரர்கள் பலி ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள இந்திய பாகிஸ்தான் எல்லையில் அடிக்கடி பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை மீறி தாக்குவது தொடர்கதையாக உள்ளது இதனிடையே பாகிஸ்தானின் அத்து மீறி தாக்குதலுக்கு இந்தியா கொடுத்த கடும் பதிலடியில் அந்நாட்டு வீரர்கள் 2 பேர் பலியாகினர். ஜம்மு காஷ்மீர் அக்நூர் மற்றும் சுந்தர் பாரி செக்டார் நேற்று முன்தினமும் நேற்றும் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய பகுதிகள் மீது தாக்குதல் … Read more

ஜார்க்கண்ட் தேர்தல் கருத்துக்கணிப்பு – அதிர்ச்சியில் பா.ஜ.க ?

ஜார்க்கண்ட் தேர்தல் கருத்துக்கணிப்பு - அதிர்ச்சியில் பா.ஜ.க ?

81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத்திற்கு ஐந்தாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கிறது. ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ் – ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில் வாக்குப்பபதிவுக்கு பிந்தையை கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதில், ஆட்சி அமைக்க 41 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி … Read more

விவசாயிகளுக்கு 2 லட்சம் வரை கடன் தள்ளுபடி – உத்தவ் தாக்ரே

விவசாயிகளுக்கு 2 லட்சம் வரை கடன் தள்ளுபடி - உத்தவ் தாக்ரே

மராட்டிய மாநிலத்தில், வறட்சி, போதிய விளைச்சல் இன்மை, விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் விவசாயிகள் தற்கொலை தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக மரத்வாடா மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் அதிக அளவில் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். விவசாயிகள் தற்கொலைகளை தடுக்க பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் புதிதாக பதவியேற்ற சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு விவசாயிகளுக்கான கடனை தள்ளுபடி செய்துள்ளது. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே … Read more

பிரதமர் மோடி உயிருக்கு ஆபத்து – உளவுத்துறை.

பிரதமர் மோடி உயிருக்கு ஆபத்து – உளவுத்துறை.

இந்திய தலைநகர் டில்லியில் அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான பிரச்சாரத்துக்கு அரசியல் கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன. பா.ஜ.க வின் பிரச்சாரத்தை பிரதமர் மோடி இன்று துவங்கி வைக்கிறார். இதற்காக டில்லி ராம் லீலா மைதானத்தில் பிரதமர் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில் டில்லியில் அங்கீகாரம் இல்லாத குடிசை பகுதிகளை முறைப்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து பிரதமர் விளக்கவுள்ளார். இந்நிலையில் பிரதமர் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில், பாகிஸ்தானை … Read more

குடியுரிமை திருத்த சட்டம் வாபஸ் கிடையாது – பிரகாஷ் ஜாவடேகர்.

குடியுரிமை திருத்த சட்டம் வாபஸ் கிடையாது - பிரகாஷ் ஜாவடேகர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து மேற்கு வங்கத்தில் பிரம்மாண்ட கூட்டத்தை திரட்டி முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தினார்.  பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் “குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை ஐ.நா கண்காணித்து, தானே முன்வந்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் ” என கூறினார். இந்நிலையில் மம்தா பானர்ஜிக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை … Read more

தேசிய கீதம் பாடி போராட்ட காரர்களை கலைத்த காவலர்?

தேசிய கீதம் பாடி போராட்ட காரர்களை கலைத்த காவலர்?

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன குறிப்பாக வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு, நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்ட களத்தில் இறங்கினர். சென்னை பல்கலை கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு மக்கள் நீதி மய்யம் … Read more

கல்கி சாமியாருக்கு இவ்வளவு சொத்தா!

கல்கி சாமியாருக்கு இவ்வளவு சொத்தா!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வரத பாளையத்தில் கல்கி ஆசிரமம் செயல்பட்டு வருகிறது இந்த ஆசிரமத்தை கல்கி சாமியார் என்று கூறப்படும் விஜயகுமார் என்பவர் தலைமை தாங்கி நடத்தி வருகிறார் விஜயகுமார் விஷ்ணுவின் அவதாரம் என்றும் கூறி கொண்டு அவரை தேடி வரும் ஏராளமானோர்களுக்கு ஆசி வந்தார் இதில் அவருக்கு பணம் அதிகளவில் கிடைத்ததாகவும் அதை வைத்துதான் சித்தூரில் கல்கி ஆசிரமம் கட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கல்கி ஆசிரமம் பெயரில் சொத்துக்கள் வாங்கி இருப்பதாகவும் … Read more

இந்தியாவின் “டாப் 100 பிரபலங்கள்” – போர்ப்ஸ் அறிவிப்பு.

இந்தியாவின் "டாப் 100 பிரபலங்கள்" – போர்ப்ஸ் அறிவிப்பு.

அமெரிக்காவை சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிக்கை 2019ம் ஆண்டுக்கான இந்தியாவின் டாப் 100 பிரபலங்கள் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய கேப்டன் “கிங்” கோஹ்லி முதலிடம் பிடித்துள்ளார்.  2019ம் ஆண்டு இவரின் வருமானம் 253 கோடி ருபாய். இரண்டாம் இடத்தில் பாலிவுட் நடிகரும், ரஜினியுடன் 2.O படத்தில் வில்லனாக நடித்தவருமான அக்ஷய் குமார் இடம் பிடித்துள்ளார். கடந்த 2016’ம் ஆண்டு முதல் இந்த பட்டியலில் முதல் இடம் வகித்துவந்த சல்மான் கான் இந்த ஆண்டு மூன்றாம் … Read more

ரேஷன் கடைகளில் மீன், முட்டை, ஆட்டிறைச்சி – “நிடி ஆயோக் ” பரிந்துரை.

ரேஷன் கடைகளில் மீன், முட்டை, ஆட்டிறைச்சி - "நிடி ஆயோக் " பரிந்துரை.

நாடு முழுவதும், எந்த ரேஷன் கடையிலும், உணவு பொருட்களை வாங்கும் வகையில்,”ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு ” திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் முதல் கட்டமாக ஆறு மாநிலங்களில் மட்டும் இந்த திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் முதல் அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் ஆலோசனை நடத்திய பின் இந்த வடிவம் உருவாக்கபட்டுள்ளது, ரேஷன் … Read more

திமுக சார்பாக குடியுரிமைச் திருத்த சட்டத்தை எதிர்த்து மாபெரும் பேரணி-கட்சிகளுக்கு ஸ்டாலின் அழைப்பு

MK Stalin

திமுக சார்பாக குடியுரிமைச் திருத்த சட்டத்தை எதிர்த்து மாபெரும் பேரணி-கட்சிகளுக்கு ஸ்டாலின் அழைப்பு பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் இது குறித்து அடுத்தகட்ட செயல்பாட்டிற்காக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சந்தித்து பேசும் அனைத்து கட்சி கூட்டம் சென்னை அறிவாலயத்தில் நடந்து முடிந்துள்ளது. இதில் இந்த சட்டத்தை எதிர்த்தும் இதற்கு காரணமாக இருந்த பாஜக … Read more