மலக் குடலை சுத்தம் செய்யும் இயற்கை “பேதி உருண்டை”!! இதை எவ்வாறு தயார் செய்வது?

0
249
Natural Colon Cleanser "Bedhi Ball"!! How to prepare it?
Natural Colon Cleanser "Bedhi Ball"!! How to prepare it?

மலக் குடலை சுத்தம் செய்யும் இயற்கை “பேதி உருண்டை”!! இதை எவ்வாறு தயார் செய்வது?

வயிற்றில் தேங்கி கிடக்கும் கழிவுகளை ஆசனவாய் வழியாக வெளியேற்றுவது வழக்கம்.ஆனால் ஒரு சிலருக்கு அவை குடலில் தேங்கி இறுகி வெளியில் வராமல் இருக்கும்.இந்த மலக் கழிவுகளை வெளியேற்ற கடையில் விற்க கூடிய பேதி மாத்திரைகளை உட்கொள்ளாமல் இயற்கையான பேதி மாத்திரை தாயார் செய்து சாப்பிட்டால் ஆரோக்கியமான முறையில் பலன் அடைய முடியும்.

தேவையான பொருட்கள்:-

1)மலை நெல்லிக்காய் – 2
2)கறிவேப்பிலை – 3 கொத்து
3)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் இரண்டு மலை நெல்லிக்காயை எடுத்து விதை நீக்கி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.

அதன் பின்னர் மூன்று கொத்து கறிவேப்பிலையை நீரில் போட்டு அலசி மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.

பிறகு ஒரு தேக்கரண்டி தேனை மிக்ஸி ஜாரில் ஊற்றவும்.பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.

பிறகு இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு நாள் முழுவதும் சாப்பிடவும்.

இவ்வாறு செய்வதினால் அடுத்த நாள் காலையில் மலக் குடலில் தேங்கிய மலங்கள் அனைத்தும் அடித்துக் கொண்டு வெளியேறி விடும்.இதனால் குடல் முழுமையாக சுத்தமாகும்.

நெல்லிக்காய்+கறிவேப்பிலை+தேனை அரைத்து உருண்டைகளாகவும் உட்கொள்ளலாம்.இல்லையேல் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து ஜூஸ் போலவும் குடிக்கலாம்.

Previous articleமுருங்கை பருப்பு பொடியை பாலில் கலந்து குடித்து வந்தால் ஆயுசுக்கும் மருத்துவரை அணுக தேவையில்லை!!
Next articleஉயர் இரத்த அழுத்தம்(BP): இதை ஜூஸ் குடித்து கூட உடனடியாக கட்டுப்படுபடுத்தலாம்!!