இயற்கை முறையில் ஹேர் கண்டிஷனர்!! ஒரு முறை பயன்படுத்தினாலே முடி பயங்கர சாஃப்டாகிடும்!!

0
138

இயற்கை முறையில் ஹேர் கண்டிஷனர்!! ஒரு முறை பயன்படுத்தினாலே முடி பயங்கர சாஃப்டாகிடும்!!

நம் அனைவருக்கும் தலைமுடி அழகாகவும்,பளபளப்பாகவும் வைத்திருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும்.தலைக்கு குளித்த உடன் கூந்தலுக்கு ஹேர் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.நாம் அவ்வாறு உபயோகிக்கும் கண்டிஷனர் ரசாயனத்தில் இருந்தால் அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு இயற்கை முறையில் செய்த ஹேர் கண்டிஷனரை பயன்படுவது நல்லது.இதனால் நமக்கு எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது.

இயற்கை ஹேர் கண்டிஷனர் தயாரிக்கும் முறை

தேவையான பொருட்கள்:

தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன்

தயிர் – 2 ஸ்பூன்

ரோஸ் வாட்டர் – 1/2 ஸ்பூன்

எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

செய்முறை:-

1.ஒரு பவுல் எடுத்து அதில் சுத்தமான தேங்காய் எண்ணெய் மற்றும் தயிர் சேர்த்து கொள்ள வேண்டும்.

2.அதில் முகத்திற்கு பயன்படுத்தும் பன்னீர் அதாவது ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கி அடர்த்தியாக பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வரவும்.

3.இதை கூந்தல் முழுக்க தடவி சுமார் 20 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்பு கொண்டு நன்கு அலசி கொள்ளவும்.

*சுத்தமான தேங்காய் எண்ணெய் தலைமுடியை மென்மையாக மாற்றுவதோடு தலைமுடியை நீளமாகவும்,அடர்த்தியாகவும் வளர்க்க செய்கிறது.

*எலுமிச்சை சாறு தலையில் உள்ள பொடுகை போக்க உதவுகிறது.

*தயிர் முடிகளுக்கு தேவையான ஈரப்பதத்தை கொடுக்கிறது.

Previous articleஅவர்களுக்கு கார்.. அனிருத்துக்கு? தொடரும் கலாநிதி மாறனின் பரிசு மழை!!
Next articleஅடிக்கடி கை மற்றும் கால் மரத்து போகுதா? அப்போ இது தான் காரணம்!!