அடிக்கடி கை மற்றும் கால் மரத்து போகுதா? அப்போ இது தான் காரணம்!!

0
35

அடிக்கடி கை மற்றும் கால் மரத்து போகுதா? அப்போ இது தான் காரணம்!!

நாம் ஓரிடத்தில் நீண்ட நேரம் கால்களை மடக்கியவாறு உட்கார்ந்திருக்கும் போது மற்றும் கால்களை தொங்கவிட்ட நிலையில் தொலைதூர பயணங்கள் மேற்கொள்ளும் போது நமது கை, கால்கள் மரத்து போவதை உணர்ந்திருப்போம்.இந்த உணர்வு அடிக்கடி நிகழ்ந்தால் அது உடலில் நோய்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.இதனால் மிகவும் கவனமாக இருங்கள்.

1.நம் உடல் எடை அதிகரித்தால் இந்த பிரச்சனை ஏற்படும்.

2.தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பிகள் குறைந்தால் இந்த கை,கால்கள் மரத்து போதல் பாதிப்பை உணர முடியும்.

3.உடலில் வைட்டமின் B12 குறைபாடு ஏற்பட்டாலும் கை,கால் மரத்து போகும் பிரச்சனை உண்டாகும்.அதேபோல் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த கை, கால் மரத்து போகும் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

4.சர்க்கரை நோயாளிகள் அவர்களது கை,கால்கள் மரத்து போகாமல் இருக்க வேண்டும் என்றால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.குறிப்பாக இவர்களுக்கு கால்களில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் அவர்களது நரம்புகளுக்கு அதிகளவு பாதிப்பு ஏற்படும்.

5.மது அருந்தும் பழக்கம் கொண்டிருப்பவர்களுக்கு அடிக்கடி கை,கால்கள் மரத்து போவது உடலில் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறி செயலாகும்.ஒரு சிலருக்கு தலையின் ஒரு பக்கம் மட்டும் மரத்து போகும் அது பக்கவாதத்திற்கான அறிகுறிகள் என்று சொல்லப்படுகிறது.

மரத்து போதல் பாதிப்பிலிருந்து தப்பிக்க உணவு முறை:

*இந்த கை,கால் மரத்து போகும் பிரச்சனை உள்ளவர்கள் அன்றாட உணவில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பொருட்களை உட்கொள்ள வேண்டும்.

*வைட்டமின் B12 குறைபாடுகள் உள்ளவர்கள் மீன்,இறைச்சி போன்ற அசைவ உணவுகளை அடிக்கடி அதிகளவு உண்ண வேண்டும்.

*இந்த மரத்து போதல் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கான சிகிசைகளை முறையாக கொண்டு வந்தோம் என்றால் இந்த பாதிப்பிலிருந்து எளிதாக விடுபட்டு விட முடியும்.