எலும்பிற்கு பலம் சேர்த்து கால்வலி, முதுகுவலி, இடுப்புவலி நீங்க இந்த உருண்டையை சாப்பிடுங்க!

Photo of author

By Kowsalya

இந்த உருண்டையை ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் போதும். உங்களுக்கு இருக்கக்கூடிய கால்வலி, முதுகுவலி, இடுப்புவலி நீக்கி எலும்பிற்கு பலம் சேர்த்து சுறுசுறுப்பாக இருக்கச் செய்யும்.

தேவையான பொருட்கள்

1. ராகி மாவு ஒரு கப்

2. நெய் 2 ஸ்பூன்

3. திராட்சை ஒரு ஸ்பூன்

4. முந்திரி ஒரு ஸ்பூன்

5. நாட்டுச் சர்க்கரை ஒரு கப்

6. பால் காய்ச்சியது ஒரு கப்

செய்முறை:

1. அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் நெய் விடவும்.

2. அதில் முந்திரி திராட்சை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

3. அதே நெய்யில் ஒரு கப் ராகி மாவை போட்டு வறுத்துக் கொள்ளவும். ஐந்து நிமிடம் நன்றாக வறுத்துக் கொள்ளவும்.

4. இப்பொழுது இதனுடன் ஒரு கப் நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

5. இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளவும்.

6. ஏற்கனவே காய்ச்சிய பாலை ஊற்றவும். வேண்டுமென்றால் இன்னும் கொஞ்சம் ஊற்றிக் கொள்ளலாம்.

7. நன்றாக வறுத்துக் கொள்ளவும். அனைத்துப் பொருள்களும் ஒன்றாக கலக்கும்படி வறுத்துக் கொள்ளவும்.

8. அடுப்பை அணைத்து விட்டு வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சை சேர்த்து விடவும்.

9. கொஞ்சம் சூடு ஆறியதும் உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.

10. இதனை நீங்கள் ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.

இதனை உணவு சாப்பிட்ட பிறகு நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு ஒன்று வீதம் தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

இந்த உருண்டையை அனைத்து வயதினரும் சாப்பிடலாம். மிகவும் சக்தியை கொடுக்கும்.

கால்சியம் சத்து குறைவாக உள்ளவர்கள் ராகியை எடுத்துக் கொள்ளும்போது உடலுக்கு ஒரு புத்துணர்ச்சி தருவதோடு பலம் சேர்க்கிறது.