நயன்தாரா குழந்தைக்கு நான் தான் சீர் செய்வேன்!! பிரபல நடிகர் ஓபன் டாக்!!

0
131
Nayantara's baby I will groom!! Popular Actor Open Talk!!
Nayantara's baby I will groom!! Popular Actor Open Talk!!

நயன்தாரா குழந்தைக்கு நான் தான் சீர் செய்வேன்!! பிரபல நடிகர் ஓபன் டாக்!!

நயன்தாரா  தற்பொழுது நடித்து கொண்டு இருக்கும் படம் தான் ஜாவான். இதில் ஷாருக்கான் அவர்களுடன் இணைத்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ஒன்றாக வெளிநாடுகளுக்கு சென்று விடுமுறை நாட்களை கழித்து வருகின்றனர்.மேலும் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்று தாய் ஆனார்.

அந்த வகையில் நகைச்சுவை நடிகராக இருந்து தற்பொழுது தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோவாக மாறி இருப்பவர்தான் நடிகர் சந்தானம். இவர் இயக்குனர் எஸ். பிரேம் அவர்களின் இயக்கத்தில் நடித்து வருகின்ற படம் தான் டிடி ரிட்டன்ஸ்.

இந்த படம் தற்பொழுது வெளியாகி உள்ளது. இந்த படம் சந்தானம் கொடுத்த வெற்றி படங்களில் ஒன்றான “ தில்லுக்கு துட்டு” படத்தின் மூன்றாம் பாகம்.இந்த படத்திற்கு மட்டும் சந்தானம் ரூ. 5 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்  என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சந்தானம் முதன் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.அதில் அவர் நயந்தாரவிற்கும் எனக்கும் வல்லவன் படத்தில் இருந்தே நன்றாக தெரியும் என்றும் அதன் பிறகு இருவரும் பல படங்களில் இணைந்து நடித்திருக்கின்றோம்  என்றும் கூறினார்.

அதன் பிறகு நயன்தாரா என்னை எப்பொழுதும் அண்ணா என்று தான் அழைப்பார் எனக்கும் அவர் ஒரு தங்கை என்று கூறினார். சமீபத்தில் நான் அவர் வீட்டிற்கு சென்றேன் அண்ணன் வருவதாக சொல்லி விருந்து வைத்தார் என்று கூறினார். மேலும் குழந்தையை என்னிடம் கொடுத்து மாமா வந்திருக்கிறார் என்று அறிமுக படுத்தியதாகவும் கூறினார். அதற்கு சந்தானம் குழந்தைக்கு காது குத்தும் போது என் மடியில்  தான் வைத்து குத்தனும் என்றும் அதற்கு நான்தான் சீர் செய்வேன் என்றும் கூறியதாகவும் தெரிவித்தார்.

Previous articleதளபதி 68 அப்டேட் வரும்போது சும்மா தெறிக்கும்!! ரசிகர்களை மிரள வைத்த வெங்கட் பிரபு!!
Next articleஅஜித்துடன் இணைவது யார் த்ரிஷா? தமன்னா? வெளிவந்த முக்கிய அப்டேட்!!