லேடி சூப்பர் ஸ்டாரா என அழைக்கப்படும் நயன்தாராவின் புகைப்படத்தை போர்ப்ஸ் இந்திய பத்திரிகை நிறுவனம் தனது அட்டைப்படத்தில் வெளியிட்டு பெருமைப்படுத்தி உள்ளது.
சத்தியன் அந்திக்காடின் மனசினக்கரை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. நயன்தாரா தனது இயற்பெயரான டயானா மரியம் குரியன் என்ற பெயரை சினிமாவுக்காக நயன்தாரா என்று மாற்றினார். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் சரத்குமாருடன் ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் அதே வருடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சந்திரமுகி திரைப்படத்திலும் நடித்தார்.
அதன்பிறகு, இவர் தமிழ் தெலுங்கு முன்னணி நடிகர்களுடன்டன் நடிக்க ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் இவரது சினிமா மார்க்கெட் குறைந்ததை அடுத்து பில்லா படத்தில் தனது உடலை குறைத்து புது லுக்குடன் திரும்பி வந்தார். அன்றிலிருந்து இன்றுவரை நயன்தாரா தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை நிறுவனம் இந்திய பதிப்பில் நடிகை நயன்தாராவின் புகைப்படத்தை அட்டைப்படமாக போட்டு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் முன்னணியில் இருக்கும் சூப்பர் டூப்பர் நடிகை என புகழ்ந்துள்ளது. இதனை நடிகை நயன்தாரா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
https://twitter.com/NayantharaU/status/1447444399860772864