அந்த இடத்தில் டாட்டூ இப்போது தேவையா?? நடிகையை விமர்சிக்கும் இணையவாசிகள்!!

Photo of author

By CineDesk

அந்த இடத்தில் டாட்டூ இப்போது தேவையா?? நடிகையை விமர்சிக்கும் இணையவாசிகள்!!

CineDesk

Need a tattoo on that spot now?? Netizens criticizing the actress!!

அந்த இடத்தில் டாட்டூ இப்போது தேவையா?? நடிகையை விமர்சிக்கும் இணையவாசிகள்!!

விஜய் டிவியில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான ஒரு பிரபலமான சீரியல் தான் சரவணன் மீனாட்சி. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த சீரியலில் நடித்த ஹீரோயின் தான் நடிகை ரக்ஷிதா ஆவார். இவர் சின்னத்திரையில் பெரிய அளவில் வளர்ந்ததற்கு காரணமே இந்த சரவணன் மீனாட்சி சீரியல் தான்.

இதற்கு பிறகு இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார். நடிகை ரக்ஷிதா தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

இவர்களின் திருமண பந்தம் சில ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. சமீப காலமாகவே இருவரும் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் தனது கணவர் ஆபாச வார்த்தைகள் பேசியதாக கூறி அவர் மீது ரக்ஷிதா புகார் அளித்திருந்தார்.

இந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் எப்போதுமே ரக்ஷிதா ஆக்டிவாக தான் இருப்பார்.

எனவே புகைப்படங்களையும், சில வீடியோக்களையும் அடிக்கடி பதிவிட்டு வருவார். இவரின் உடலில் அதிக இடங்களில் இவர் பச்சை குத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வரிசையில் தற்போது இவர் தன்னுடைய மார்பக பகுதியில் புதிதாக ஆந்தை போல் ஒரு படத்தை பச்சை குத்தி உள்ளார். இதைபார்த்த ரசிகர்கள் பலர் அந்த இடத்தில் டாட்டூ தேவையா என்று கருத்துக்களை கூறி வருகின்றனர்.