தளபதி 68 க்கு பிஜிஎம் அமைக்கும் யுவன்!! செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிவந்த தகவல்!! 

0
73
Yuvan to make PGM for Thalapathy 68!! The information that came out in the press conference!!
Yuvan to make PGM for Thalapathy 68!! The information that came out in the press conference!!

தளபதி 68 க்கு பிஜிஎம் அமைக்கும் யுவன்!! செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிவந்த தகவல்!!

விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்தார். இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகும் என்று படக்குழு முன்கூட்டியேஅறிவித்திருந்தது.

இதனையடுத்து வெளிவரவிருக்கும் லியோ படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர்கள் சஞ்சய் தத், திரிஷா, அர்ஜூன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர், இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும்  இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் லியோ திரைப்படத்தின் முதல் பாடலான நா ரெடி பாடல் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகியது. சில நாட்கள்  படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் படப்பிடிப்பு முடிவடைந்தாக தெரிவித்திருந்தார்.

அதனையடுத்து தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். ஆனால் இந்த படப்பிடிப்பு இன்னும் தொடங்க வில்லை. இந்த நிலையில் அந்த படத்தின் ஆடியோ ரைட்ஸ் உரிமையை பிரபல நிறுவனம் வங்கியுள்ளது. மேலும் தமிழ் சினிமாவில் எந்த ஒரு படமும் விற்காத அதிகபட்ச விலைக்கு தளபதி 68 படத்தின் ஆடியோ ரைட்ஸ் 26 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு இருந்தது.

அதனையடுத்து இந்த படத்தில் விஜய் யுவன் கம்போ பாடல் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரசிகர்கள் இந்த படத்திற்கு ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள். இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இசையமைப்பாளர் யுவன் கலந்து கொண்டார்.

விஜய் படத்திற்கு அஜித் நடித்த மங்காத்தா , பில்லா படங்களில் இடம் பிடித்த பிஜிஎம் போன்ற இசை அமையுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த யுவன் கண்டிப்பாக எதிர்பார்க்கலாம் என்று குறிப்பிட்டார். மேலும் அவர் விஜய் சார் உடன் இணைவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என்றும் தெரிவித்தார். ஆனால் அதற்கான பணி இன்னும் தொடங்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

author avatar
Jeevitha