நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு! தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிக்கை!
அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கு நீட் தேர்வு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்து முடிந்தது. தமிழகத்திலிருந்து தேர்வு எழுதுவதற்கு ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் நேற்று நண்பகல் 11.40 மணி முதல் 1.30 மணி வரை தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் அதன் பிறகு தேர்வு நிலையத்திற்கு வந்த மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பின்னர் 2 மணிக்கு தேர்வு தொடங்கி மாலை 5:20 மணி வரை தேர்வானது நடைபெற்றது. மேலும் தேர்வு அறைக்குள் மாணவ மாணவிகள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற நீட் தேர்வு 95% தேர்வு எழுதியதாகவும் 18,72,343 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 17,78,725 பேர் மட்டுமே வருகை தந்த தேர்வு எழுதினார்கள் என்றும் தேசிய தேர்வு முகமை மையம் தெரிவித்துள்ளது. இந்த தேர்வுக்கான விரைவில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.