நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளரை காணவில்லை! பின்னணியில் நாங்குநேரி எம்எல்ஏ?!

0
292
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளரை காணவில்லை! பின்னணியில் நாங்குநேரி எம்எல்ஏ?!
nellai jayakumar

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளரை காணவில்லை என்று காவல் துறையில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.

தொழிலதிபரான ஜெயக்குமார் கடந்த இரண்டாம் தேதி வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அன்று இரவு முதல் அவரை காணவில்லை. அவரின் உறவினர்கள் பல இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர் எங்கும் கிடைக்காததால், தற்போது அவருடைய மகன் காவல்துறையில் புகார் அளித்து உள்ளார்.

இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், காணாமல் போன ஜெயக்குமாரை தேடி வருகின்றனர். இதற்கிடையே கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி ஜெயக்குமார் தனது கைப்படை எழுதிய கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

jayakumar congs
jayakumar congs

அவரின் அந்த கடிதத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், அவர்களால் தனது உயிருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் நாங்குநேரி எம்எல்ஏ தனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாகவும், தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமாரின் கடிதம் குறித்து இதுவரை காவல் துறை தரப்பிற்கு புகார் எதுவும் அளிக்கப்படவில்லை. மாயமான ஜெயக்குமார் உயிருடன் இருக்கிறாரா? அல்லது அவர் கைப்பட எழுதிய கடிதத்தின் படி அவர் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே அச்சம் கேள்வி எழுந்துள்ளது.

Previous articleசவுக்கு சங்கரை கைது செய்து கொண்டு சென்ற வாகனம் விபத்தா? அதிர்ச்சி தகவல்!
Next articleரூ.40 கோடி! வசமாக சிக்கிய தங்கம், வெள்ளி! அடுத்தடுத்து சிக்கிய வாகனங்கள்!