நேதாஜி பிறந்தநாள் பொது விடுமுறை அறிவிப்பு? உச்சநீதிமன்றம் கண்டனம்!!
மதுரையை சேர்ந்த கே.கேரமேஷ் என்பவர் சார்பில் வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் நேதாஜி பிறந்தநாளை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் நீதிமன்ற வரம்புக்குள் வராது.இவை வழக்கறிஞரான உங்களுக்கு தெரிந்தும் ஏன் இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்கின்றனர் என கேள்வி எழுப்பினார்கள்.
மேலும் நீங்கள் இவ்வாறு செய்வது நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கும் செயலாக உள்ளது.பொதுநல மனு என்றாலே அது அவசரம் மற்றும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகின்றது.ஆனால் நீங்கள் பொதுநல மனுவை ஒரு வேடிக்கை பொருளாக பயன்படுத்துவது நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது என கடும் கண்டனம் தெரிவித்தனர்.மேலும் தலைமை நீதிபதி சந்திரசூட் அதுதொடர்பான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.