தளபதி 67 படத்தின் டிஜிட்டல் உரிமைக்கு இப்போதே சீட் போட்டு வைக்கும் பிரபல ஓடிடி

0
104

தளபதி 67 படத்தின் டிஜிட்டல் உரிமைக்கு இப்போதே சீட் போட்டு வைக்கும் பிரபல ஓடிடி

விஜய் நடிப்பில் லோகேஷ் நடிக்க உள்ள படத்துக்கு தளபதி 67 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து அவர் வம்சி இயக்கும் புதிய படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் தளபதி 67 என்ற திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.  இந்த படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் தயாரிக்க, அனிருத் இசையமைப்பார் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் இருவரும் மாஸ்டர் என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்துள்ளனர். சமீபத்தில் லோகேஷ் இயக்கிய விக்ரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது.

இந்நிலையில் லோகேஷ் தற்போது விஜய் படத்தின் திரைக்கதை வேலைகளில் பிஸியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. கதைப்படி படத்தில் 6 வில்லன்கள் கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் பிருத்விராஜ், சஞ்சய் தத், அர்ஜுன் ஆகியோர் நடிக்க வாய்ப்புள்ளதாக சொலல்ப்படுகிறது. அந்தவகையில் இப்போது மற்றொரு வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் பூஜை கூட இன்னும் நடக்கவில்லை. அதற்குள்ளாகவே இந்த படத்தின் பிஸ்னஸ் பேச்சுவார்த்தை தற்போது தொடங்கியுள்ளது. இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையைப் பெற நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிப்பாளரை அணுகி பேச்சுவார்த்தை நடத்திவருவதாக சொல்லப்படுகிறது.