கனல் கண்ணனை அலேக்காக தூக்கிய போலீஸ்! 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு!

0
137
Police picked up Kanal Kannan as Ale! Order to keep the court in custody until the 26th!
Police picked up Kanal Kannan as Ale! Order to keep the court in custody until the 26th!

கனல் கண்ணனை அலேக்காக தூக்கிய போலீஸ்! 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு!

சென்னை மதுரவாயலில் இந்து முன்னணி சார்பில் இந்துக்கள் உரிமை மீட்க பிரச்சார பயணம் நடைபெற்றது. இதில் திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் மற்றும் இந்து முன்னணி அமைப்பின் மாநில கலை மற்றும் பண்பாட்டு தலைவருமான கடல் கண்ணன் கலந்து கொண்டார். இந்த பயண நிறைவு பொதுக்கூட்டம் நடைபெற்ற பொழுது பெரியார் பற்றி அவதூறாக பேசியுள்ளார்.

அதில் கனவு கண்டால் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் பொழுது கடவுளே இல்லை என்று சொன்ன பெரியாரின் சிலை இருப்பது குறித்த அவதூறாக பேசினார்.எப்பொழுது அந்த சிலை உடைக்கப்படுகிறது அப்பொழுதுதான் இந்துக்களின் எழுச்சி நாள் என்று கூறினார். இவ்வாறு கனவு கண்ணன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் அவ்வாறு பேசியதன் விளைவாக பெரியார் திராவிட கழகம் சார்பில் அவரின் மேல் புகார் அளித்தனர்.

புகார் அளித்ததின் பேரில் கனல் கண்ணன் மீது இரண்டு வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யும் படி உத்தரவு தெரிவிக்கப்பட்டது. அவர் வீடு உள்ளிட்ட முக்கிய மூன்று இடங்களில் போலீசார் அவரை கைது செய்ய தயார் நிலையில் இருந்தனர். ஆனால் அவர் போலீசாரிடம் ஆஜராகவில்லை. இன்று போலீசார் கனல் கண்ணனை கைது செய்துள்ளனர். எழும்பூர் சிறப்பு நீதிமன்ற பன்னெண்டாவது அமர்வில் கனல் கண்ணன் ஆஜர்ப்படுத்தப்பட்டார். கனல் கண்ணனை வரும் 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.