2 கோர விபத்தால் அலறும் தமிழ்நாடு.. கூலாக செல்பியோடு கோடையை கொண்டாடும் ஸ்டாலின் – கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!!

2 கோர விபத்தால் அலறும் தமிழ்நாடு.. கூலாக செல்பியோடு கோடையை கொண்டாடும் ஸ்டாலின் – கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!!

தமிழ்நாட்டில் நேற்று முதல் அடுத்தடுத்து கோர விபத்துக்கள் நடந்த வண்ணமாகவே உள்ளது.அந்த வகையில் சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் செல்லும் பொழுது தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கிட்டத்தட்ட சிறுவர் உற்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த கோர விபத்திலிருந்து மீளுவதற்குள் விருதுநகர் மாவட்டத்தில் வெடி விபத்து ஏற்பட்டு கிட்டத்தட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி அங்குள்ள மக்களின் வீடுகளும் இடிந்து விழுந்துள்ளது. இதனால் வாழ்வாதாரமின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.இவ்வாறு அடுத்தடுத்து சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் முதல்வரோ இதனை கவனிக்காமல் தனது சுற்றுலா பயண நேரத்தை மிகவும் மகிழ்ச்சியாக செலவழித்து வருகிறார்.சுற்றுலா பயணத்திற்காக கொடைக்கானல் சென்றுள்ள ஸ்டாலின் அங்கிருந்தே பலியானவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை மட்டும் தெரிவித்து வருகிறார்.

தற்பொழுது வரை இரண்டு விபத்து அரங்கேறியும் முறையாக நிவாரணம் வழங்குவது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.தமிழகத்தில் இந்த கோர விபத்தால் மக்கள் எழுப்பும் அவலக்குரல் முதல்வருக்கு கேட்கவில்லை என்று பலரும் கூறி வருகின்றனர்.பொழுதுபோக்கிற்காக நேரத்தை செலவழிப்பதும் அங்குள்ள மக்களுக்கு போட்டோக்கு போஸ் கொடுப்பதையே தற்போது முதல்வர் வேலையாக வைத்துள்ளார்.

மக்கள் கதறும் எதுவும் அவரது காதுக்கு கேட்கவில்லை.குறிப்பாக சுட்டெரிக்கும் வெப்பத்தால் தினந்தோறும் வயது முதிந்தவர்கள் பலர் உயிரிழந்தும் வருகின்றனர்.அதற்கென்று நிழற்கூடம் தண்ணீர் பந்தல் முறையாக அமைக்கும் படி பல கோரிக்கைகளை மக்கள் வைத்து தான் வருகின்றனர்.ஆனால் முதல்வர் அதனிஎல்லாம் கண்டுகொள்ளாமல் தனது உஷ்ணத்தை தணிக்க கொடைக்கானல் சென்றுள்ளார்.

அதுமட்டுமின்றி வீடுகள் இடிந்தும் மக்களை பலி கொடுத்தும் பலர் கதறும் நிலையில் அதிகாரிகளை நேரில் அனுப்பி மேற்கொண்டு அடுத்தடுத்த நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கலாம்.ஆனால் முதல்வரின் பணியில் தோய்வு தான் காணப்படுகிறது என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.