விதை இல்லாத பழங்களை ஒரு போதும் சாப்பிடாதீர்கள்.. உடலுக்கு எந்த பயனும் இல்லை!!

Photo of author

By Rupa

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதில் பழங்களின் பங்கு இன்றியமையாதது.முன்பெல்லாம் நாம் சாப்பிடும் பழங்களில் அதிகமாக விதை காணப்படும்.அந்த விதைகளை பழத்தின் சதை பற்றுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தோம்.ஆனால் இன்று நாம் சாப்பிடும் பழங்களில் விதை என்ற ஒன்று இல்லாமலே போய்விட்டது.

நவீன உலகில் விதையில்லா பழங்களின் விற்பனை அதிகரித்துவிட்டது.பெரும்பாலான மக்கள் விதை இல்லாத பழங்களையே சாப்பிட விரும்புகின்றனர்.ஆனால் விதையில்லாத பழங்களின் சுவை நன்றாக இருந்தாலும் அதில் இருந்து மிகக் குறைவான மருத்துவ பலனே நமக்கு கிடைக்கும்.

இக்காலத்தில் விதை இல்லாத பல கனிகளை உருவாக்க முடியும் என்றாலும் விதையில் இருந்து கிடைக்க கூடிய இயற்கை சத்துக்களை ஒருபோதும் அதில் இருந்து பெற முடியாது.முன்பெல்லாம் கருப்பு திராட்சை சாப்பிடும் போது அதில் இருக்கும் விதைகளை துப்பி விடுவோம்.ஆனால் இன்று திராட்சை விதைகளில் இருந்து பல நோய்களுக்கு மருந்து தயாரிக்கப்படுகிறது.இன்று விதை இருக்கின்ற திராட்சைகளை பார்ப்பதே அரிதாகிவிட்டது.

அனைவரும் விரும்பி உண்ணும் கனிகளில் பப்பாளியும் ஒன்று.இதை வெட்டினால் உள்ளே ஏகப்பட்ட விதைகள் மிளகு போன்று காணப்படும்.ஆனால் இன்று விளைவிக்கப்படும் ஹைப்ரேட் பப்பாளியில் விதைகளே இல்லாமல் விற்பனைக்கு வருகிறது.பப்பாளி விதை ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்தவை.இதில் இருந்து கடுமையான நோய்களுக்கு மருந்து தயாரிக்கப்படுகிறது.

மேலும் ஆரஞ்சு,தர்பூசணி,கொய்யா,சப்போட்டா போன்ற பல விதையில்லா ஹைப்ரேட் கனிகள் விற்பனை செய்யப்படுகிறது.விதையில்லாத கனிகளை உட்கொள்வதால் நமது உடலில் DNA வளர்ச்சி சீரற்று இருக்கும்.

விதையில்லா பழங்கள் செரிமான மண்டலத்தை பாதிப்பதோடு,வயிற்றுப்போக்கு,வயிற்று வலி போன்றவற்றை ஏற்படுத்தும்.விதையில்லாத பழங்களை சாப்பிடுவதால் பற்களின் வலிமை குறையத் தொடங்கும்.எனவே ஹைப்ரேட் பழங்களை தவிர்த்துவிட்டு நாட்டு பழங்களை சாப்பிட தொடங்குங்கள்.