UTS செயலியில் புதிய மாற்றம்.. இதை தெரிஞ்சுக்கோங்க இல்லனா உங்கள் டிக்கெட் கேன்சல்!!

0
291
new-change-in-uts-app-if-you-dont-know-this-cancel-your-ticket
new-change-in-uts-app-if-you-dont-know-this-cancel-your-ticket

UTS செயலியில் புதிய மாற்றம்.. இதை தெரிஞ்சுக்கோங்க இல்லனா உங்கள் டிக்கெட் கேன்சல்!!

பொதுமக்கள் சமீப காலமாக ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர். இதன் தேவை அதிகரிக்க அதிகரிக்க ரயில்வே நிர்வாகமும் மக்களுக்கு ஏற்றார் போல புதிய அப்டேட்டுக்களை அவ்வப்போது செய்து வருகிறது.அந்த வகையில் யூடிஎஸ் செயலி மூலம் எடுக்கப்படும் முன் பதிவில்லாத நடைமேடை டிக்கெட் முதல் முன்பதிவு செய்யும் அப்பர் பர்த் வரை நவீன முறையில் உபயோகிக்கும் வசதி வந்துவிட்டது.

பயணிகள் ரயில் நிலையத்திற்கு செல்ல நடைமேடை டிக்கெட் என தொடங்கி  மெட்ரோ மற்றும் சீசன் டிக்கெட் போன்றவற்றை புக் செய்ய யூடிஎஸ் செயலியை பயன்படுத்தி வந்தனர். இதனை உபயோகிக்கும் பலரும் இதில் உள்ள ஜியோ பென்சிங் என்ற கட்டுப்பாடு மக்கள் உபயோகிப்பதற்கு ஏற்றதாக இல்லை என்று புகார் அளித்தும் அத்தனை நீக்கும் படியும் வலியுறுத்தி வந்தனர்.

இதன் மீது கவனம் கொண்ட ரயில்வே நிர்வாகம், தற்பொழுது இந்த ஆப்ஷனை நீக்கி உள்ளது. முன்பு இந்த ஜியோ பென்சிங் இருந்ததால் குறுகிய எல்லைக்குள் இருக்கும் பொழுது மட்டும்தான் டிக்கெட்களை முன்பதிவு செய்ய முடியும். ஆனால் தற்பொழுது இந்த ஆப்ஷனை எடுத்து விட்டதால் பயணிகள் எங்கிருந்து வேண்டுமானாலும் ரயில் டிக்கெட், நடைமேடை டிக்கெட் உள்ளிட்டவற்றை புக் செய்து கொள்ளலாம்.

அதேபோல புக் செய்து இரண்டு மணி நேரத்திற்குள்ளேயே ரயில் நிலையத்திற்குள் இருக்க வேண்டும் எனவும் அதற்கு மேல் நேர தாமதம் ஆனால் அது ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்த புதிய அப்டேட்டானது பயணிகள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Previous article45 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறும் பிரபல நடிகை ஜோதிகா..!!
Next articleஅந்த விஷயத்தால் மேலாடை இல்லாமல்.. நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டேன் – கவர்ச்சி நடிகை ஷகீலா ஓபன் டாக்!!