காவேரி குறுக்கே புதிய அணை!! ஸ்டாலின் டெல்லி செல்கிறார்!! விவசாயிகள் அச்சம்!!

Photo of author

By Preethi

காவேரி குறுக்கே புதிய அணை!! ஸ்டாலின் டெல்லி செல்கிறார்!! விவசாயிகள் அச்சம்!!

தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையில் காவேரி பிரச்சனையானது பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணையை கட்டத் திட்டம் தீட்டி வருகிறது. அந்தத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக கட்சிகள் டெல்லிக்கு சென்று, அணை கட்டுதலை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. கர்நாடகா மாநில அரசு 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட முடிவு செய்துள்ளது. கர்நாடக அரசின் இந்த மேகதாது அணை திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இந்த அணை கட்டுதல் விவகாரத்தில் இரு மாநில அரசுகளும் தங்களின் நிலைமைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றது. இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி தலைவர்கள் அடங்கிய குழு ஒன்று டெல்லி புறப்பட்டு சென்றது. இந்த குழு தமிழக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஸ்ரீ கஜேந்திர சிங் செகாவத் அவர்களை நேரில் சந்தித்து தங்களின் கோரிக்கையை முறையிட்டது. அவர்களைத் தொடர்ந்து கர்நாடகா முதல்-மந்திரி எடியூரப்பா டெல்லி செல்கிறார். அவர் பிரதமரை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எடியூரப்பா பிரதமரை சந்தித்து விரைவாக மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடப்போவதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் தமிழக முதலமைச்சர் மூக்கா ஸ்டாலின் இரண்டாவது முறையாக ஞாயிற்றுக்கிழமையான இன்று மாலை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வந்துள்ளது. மு க ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு இரண்டாவது முறையாக டெல்லி செல்ல உள்ளார்.

அவர் நாளை 12:00 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து மேகதாது அணை கட்டுதல் விவகாரத்தை பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகா அரசின் இந்த அணை கட்டுதல் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகத்திற்கு தற்போது கிடைக்கும் கொஞ்சம் தண்ணீர்கூட இனிமேல் கிடைக்காது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.