கோவையில் புதிய விமான சேவை – விரைவான வெளிநாட்டு பயணம்!!

0
250
#image_title

கோவையில் புதிய விமான சேவை – விரைவான வெளிநாட்டு பயணம்

உலகின் மிகப்பெரிய தேசிய விமானசேவை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம். இதுவரை மும்பையில் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமானநிலையமும், டெல்லியில் இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தையும், தளமாக கொண்டுள்ளது.

தற்போது கோயம்பத்தூர் விமான நிலையத்தில் இருந்து வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டிற்கு விரைவாக செல்ல ” ஏர் இந்தியா ” நிறுவனம் புதிய விமானத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த மாதம் மே 3ம் தேதி இயக்கபோகிறோம் எனவும் “ஏர் இந்தியா ” நிறுவனம் தெரிவித்துள்ளது.மும்பையில் இருந்து காலை 6:30 மணிக்கு புறப்பட்டு, கோவையை காலை 8:20க்கு வந்தடையும்.

மீண்டும் கோவையிலிருந்து காலை 9:00 மணிக்கு புறப்பட்டு மும்பையை 10:50க்கு சென்றடையும் என அறிவித்துள்ளது.வெளிமாநிலம் மட்டுமின்றி வெளிநாட்டிற்கும் இயக்கவுள்ள விமானங்கள் பற்றியும் அறிவித்துள்ளது.

மும்பையிலிருந்து ரியாத் நாட்டிற்கு மதியம் 12:35மணிக்கும்,மும்பை – லண்டன் மதியம் 2:15 மணிக்கும்,

மும்பை – அமெரிக்கா சான் பிரான்சிஸ் நாட்டிற்கு மதியம் 2:30மணிக்கும்

மும்பை – துபாய் மாலை 4:30 மணிக்கும் இனி புதிய விமானங்களை இயக்கப்போவதாக “ஏர் இந்தியா ” தெரிவித்துள்ளது.

வெளிமாநிலத்திற்கு செல்வதற்கான கட்டணம் குறித்து, பின்னர் அறிவிக்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் கூறியது.

Previous articleஸ்டாலின் ஆட்சி காலத்திலேயே தமிழ்நாட்டிற்கு புதிய சட்டமன்றம் கட்ட வேண்டும் – அமைச்சர் துரைமுருகன்!!
Next articleபாரிமுனையில் விபத்தான கட்டிடத்தில் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை – தீயணைப்பு துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன்!!