ஆஸ்திரேலியாவில் புதிய கிருமித்தொற்றுச் சம்பவமா?

0
130

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், 11 புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவானதைத் தொடர்ந்து மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனும் அச்சம் எழுந்துள்ளது.  குவீன்ஸ்லந்து மாநிலத்தில் உள்ள சீர்த்திருத்த நிலையம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவருக்குக் கிருமி தொற்றியதைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. விக்டோரியா மாநிலத்தில் நேற்று 113 சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன.

கடந்த மாதத் தொடக்கத்தில் இருந்து அங்கு பதிவாகிய ஆகக் குறைவான எண்ணிக்கை அது. நோய்ப்பரவல் தணியத் தொடங்கியிருப்பதை அது குறிக்கலாம் எனக் கூறிய மாநில முதலமைச்சர் டேனியல் ஆண்ட்ரூஸ் (Daniel Andrews), முடக்கநிலைக் கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் தளர்த்தப்படலாம் என நம்பிக்கை தெரிவித்தார் ஆஸ்திரேலியாவில் இதுவரை 25,000-க்கும் மேற்பட்டோர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 570 மரணங்கள் பதிவாகியுள்ளன.

Previous articleநியூஸிலாந்தின் விமான நிறுவனங்களுக்கு இத்தனை மில்லியன் டாலர் நஷ்டமா?
Next articleபிளாட்பாரம் கடையில  சாதாரண மக்களோடு மக்களாக அமர்ந்திருக்கும் தல அஜித்! தீயா பரவும் போட்டோ!!