இ வாகனங்களுக்கு வெளிவந்த புதிய செய்தி!! முதலமைச்சரின் முக்கிய அறிவிப்பு!!

Photo of author

By CineDesk

இ வாகனங்களுக்கு வெளிவந்த புதிய செய்தி!! முதலமைச்சரின் முக்கிய அறிவிப்பு!!

இப்போது உலகம் முழுவதும் இ மின்சார வாகனம் உபயோகப்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த இ மின்சார வாகனங்களை பயன்படுத்துவதில் மக்கள் பெரும்பாலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தற்போது தமிழ்நாடு தான் இந்திய அளவில் முன்னணி நாடாக உள்ளது. மேலும் ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னையை இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கிறோம்.

இதற்கு காரணம் சென்னையில் தான் முழுக்க முழுக்க கார், பைக் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வகையில் கிருஷ்ணகிரியில் மிகப்பெரிய பைக் உற்பத்தி ஆலையை ஓலா நிறுவனம் அமைத்துள்ளது.

தமிழ்நாட்டில் மின்சார வாகனங்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக, தமிழகத்தில் இந்த இ வாகனங்களுக்கு சார்ஜிங் பாய்ண்ட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சார்ஜிங் பாய்ண்ட் மின்சார வாரியம் மூலமாக அமைக்கப்படும். இதை மக்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு வரும் காலங்களில் இந்த சார்ஜிங் பாய்ண்ட் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும், இந்த மின்சார வாகனங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த இதற்கு இலவச பர்மீட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்கள் மற்றும் மெத்தனால் அல்லது எத்தனால் எரிபொருளில் இயக்கப்படும் வாகனங்கள் என அனைத்திற்கும் போக்குவரத்து துறையின் இலவச பர்மீட் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு தற்போது இ வாகனங்களின் தலைநகராக மாறி வருகிறது. 2022 ஆம் ஆண்டிற்கு பிறகு இதற்கான முதலீடுகள் அதிகமாக குவிந்துள்ளது. கரோனாவால் மற்ற மாநிலங்களில் முதலீடுகள் குறைந்த போதும், தமிழகத்தில் முதலீடுகள் அதிகமாகவே காணப்பட்டது.