இந்த கோவிலுக்கு உயர்நீதிமன்றம் போட்ட புதிய உத்தரவு! இனி இந்த காரியங்களுக்கு பயன்படுத்த தடை!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகில் இருப்பதுதான் வையப்பமலை சுப்பிரமணிய சாமி கோவில். இந்த கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது இந்த கோவிலுக்கு சொந்தமாக 10. 64 ஹெக்டேர் நிலம் உள்ளது. இந்த நிலம் புறம்போக்கு நிலம் என்பதால் இதில் கோவிலுக்கு வருவாய் தரும் வகையில் கட்டுமானங்கள் கட்டி வாடகைக்கு விடுவது அல்லது விவசாயம் செய்ய பயன்படுத்தலாம் என அறநிலையத்துறை சட்டம் கூறுகின்றது.ஆனால் இந்த புறம்போக்கு நிலத்தை கிராம நத்தம் ஆக மாற்றி வருவாய்த்துறையினர் அந்த நிலத்தை 87 பேருக்கு இலவச வீட்டு மனை கட்டுவதற்கு பட்டா போட்டு கொடுத்துள்ளனர்.
இதனை எதிர்த்த கோவில் சார்பில் பரம்பரை அறங்காவலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.அந்த வழக்கில் தடையில்லா சான்று வாங்காமல் எப்படி பட்டா போட்டுக் கொடுக்க முடியும் என்று பல கேள்விகளை எழுப்பினர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கோவில் அறநிலையத் துறையினர் மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கூறியது, இனி அந்த கோவிலில் விழா மற்றும் கோவில் சார்ந்த சடங்குகள் ஏதேனும் நடத்தப்பட்டால் அந்த நிலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.இது தவிர்த்து வேறு யாராவது அந்த நிலத்தை பட்டா அல்லது மற்ற காரியங்களுக்காக பயன்படுத்தினால் அது நில ஆக்கிரமிப்பு கருதப்படும் என கூறினார்.
இந்த வழக்கானது நீதிபதி ஜி.கே இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்பொழுதும் அவர்கள் கூறியிருந்த மனுவிற்கு எதிர் மனுவாக வட்டாட்சியர் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் அறநிலையத் துறைக்கு தான் இந்த நிலம் சொந்தமானது என்பதை நிரூபிக்க எந்த ஆவணங்களும் தற்போது தாக்கல் செய்யவில்லை என்று கூறினார்.அது அரசு நிலம் என்று தான் பட்டா போட்டு உள்ளதாக தெரிவித்தார். இதனை அனைத்தையும் பார்த்து நீதிபதி கூறியது, கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அதன் வருமானத்திற்கு பயன்படுத்தவும் அல்லது வேறு எந்த பணிகளுக்கும் பயன்படுத்த முடியாது என அறநிலையத்துறை சட்டம் மற்றும் வருவாய்த்துறை நிலை விதிகளில் உள்ளது.மேலும் அறநிலையத்துறை ஆணையரின் தடையில்லா சான்று இல்லாமல் பட்டா மாற்றம் செய்யக்கூடாது என உத்தரவிட்டார்.