Skip to content
News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports
  • Breaking News
  • Politics
  • District News
    • Chennai
    • Madurai
    • Coimbatore
    • Salem
    • Tiruchirappalli
  • State
  • National
  • Cinema
  • Sports
Breaking News

ஆதார் கார்டு பயனாளர்களுக்கு வந்த புதிய அப்டேட்!! இனி Google pay வில் சுலபமாக கணக்கு தொடங்கலாம்!!

Published On: 15 ஜூலை 2023, 12:38 மணி | By Parthipan K
New Update for Aadhaar Card Users!! Now you can easily open an account with Google Pay!!

ஆதார் கார்டு பயனாளர்களுக்கு வந்த புதிய அப்டேட்!! இனி Google pay வில் சுலபமாக கணக்கு தொடங்கலாம்!!

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அதிக அளவில் பொதுமக்கள் தங்களது பண பரிவர்த்தனை ஆன்லைன் மூலமாக செய்து கொள்கின்றனர்.ஆன்லைன் பணம் செலுத்துவது மற்றும் பெறுவதில் எந்த வித முறைகேடும் நடந்து விட கூடாது என்பதற்காக அதற்களுக்கு பாஸ்வேர்டு போன்றவை அமைக்கப்பட்டிருக்கும்.

அந்த வகையில் இனி கூகுள் பே வாடிக்கையாளர்களுக்கு பாஸ்வேர்டு தேவை இல்லை என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.இனி வங்கியில் பணம் செலுத்த வேண்டும் என்றால் யுபிஐ கார்டை மட்டும் பயன்படுத்தினால் போதும்.

இதற்கு முன்பு வங்கியில் பணம் செலுத்த வேண்டும் என்றால் அதற்கு டெபிட் கார்டு கட்டயமாக்கப்பட்டிருக்கும் ஆனால் தற்பொழுது புதிய மற்றம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இனி ஆதார் கார்டுகளுடன் யுபிஐ ஐடியை மட்டும் பயன்படுத்தினால் போதும் இனி டெபிட் கார்டு தேவை இல்லை.

உங்களது கூகுள் ஆப்பில் உங்களது வங்கி கணக்கு எண்களுடன் நீங்கள் பயன்படுத்தும் தொலைபேசி எண் மற்றும் முகவரியை இணைக்க வேண்டும்.

உங்களது கூகுள் கணக்கை பயன்படுத்தும் பொழுது அதில் வலதுபுறத்தில் உள்ள சுய விவரம் என்ற ஆப்சனை கிளிக் செய்து அதில் நீங்கள் பரிமாற்ற விரும்பும் கட்டணத்தை பதிவு செய்ய வேண்டும்.

பின்னர் வங்கியில் உள்ள யுபிஐ ஐடியை தேந்தெடுத்து அதன் உள் நுழைந்து அதில் கேட்கப்பட்ட உங்களது யுபிஐ ஐடியை தேர்வு செய்ய வேண்டும்.

தேர்ந்தெடுத்த பிறகு அதில் உள்ள குறியீட்டை கிளிக் செய்ய அது உங்களது வங்கி கணக்கு எண் தானா என்பதை சரிபார்க்க வேண்டும். பிறகு அதில் கேட்கப்பட்ட 6 இலக்குகள் உடைய ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் .

மீதமுள்ள இலக்குகளுக்கு உங்களது தொலைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு உங்களது மொபைல் எண்ணிற்கு ஒரு ஓடிபி வரும்.

அதனை நீங்கள் பதிவு செய்ய வேண்டும்.அதன் பிறகு உங்களது கணக்கிற்கு நான்கு அல்லது ஆறு இலக்குகள் உடைய யுபிஐ பின்னை பதிவு செய்ய வேண்டும்.

© 2025 News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports • Built with GeneratePress