ஒரே நாளில் ஆயிரகணக்கானோர் பாதிப்பு!! எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவிப்பு!!

0
33
Thousands affected in one day!! Health department notice to be alert!!
Thousands affected in one day!! Health department notice to be alert!!

ஒரே நாளில் ஆயிரகணக்கானோர் பாதிப்பு!! எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவிப்பு!!

நமது அண்டை மாநிலமான கேரளாவில் இப்பொழுது எலி காய்ச்சல் மற்றும் டெங்கு அதி தீவிரமாக பரவி வருகின்றது.அதனால் தமிழ்நாட்டில் அதன் எல்லையோர மாவட்டங்களில் பொது சுகாதாரத்துறை அதிகாரிகளால் கண்காணிப்பு பணி துவங்கப்பட உள்ளது.

மேலும் தமிழக எல்லையோர மாவட்டங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சில வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

கேரளாவில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவுவதால் தமிழக எல்லையோர பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளின்  வளாகத்தில் கொசு உற்பத்தி செய்யாமல் தடுப்பதற்கு  ஆய்வு மேற்கொள்ளபட இருக்கின்றது.

இப்பொழுது கேரளா மாநிலத்தில் மட்டும் தினசரி நாள் ஒன்றிற்கு 11,800 என்ற எண்ணிக்கையில் டெங்கு காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கேரளாவில் பருவமழை எதிரொளிப்பால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.அதனால் கொசுக்களும் உற்பத்தியாக தொடகியுள்ளது . அந்த வகையில் இந்த கொசுக்கள் மக்களை கடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது.

கேரளா மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் தினசரி நாள் ஒன்றிற்கு 800 முதல் 900 என்ற எண்ணிக்கை வரை மக்கள் மருத்துவ மனைக்கு வருகின்றனர்.இதில் 70 சதவீதம் மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர்.

நேற்று மட்டும் 11813 பேர் மருத்துவ மனைக்கு வந்த நிலையில் அதில் 150 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செயப்பட்டுள்ளது.இதில் 6 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதனை போன்று இப்பொழுது கர்நாடக மாநிலத்திலும் டெங்கு காய்ச்சல் பரவி வருகின்றது. தற்பொழுது கேரளா உட்பட பெங்களூர் ,ஒடிசா,புவனேஷ்வர் போன்ற பல்வேறு மாநில மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

எனவே பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மாநில அரசு வலியுறுத்தி வருகின்றது.

author avatar
Parthipan K