பணம் சம்பாதிக்க புதிய வழி!! ட்விட்டர் நிர்வாகி எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!!

Photo of author

By CineDesk

பணம் சம்பாதிக்க புதிய வழி!! ட்விட்டர் நிர்வாகி எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!!

CineDesk

Updated on:

பணம் சம்பாதிக்க புதிய வழி!! ட்விட்டர் நிர்வாகி எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!!

இணையத்தளத்தில் பல வகையில் மக்கள் பணம் சம்பாதித்து கொண்டிருக்கும் நிலையில் எலான் மஸ்க் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ட்விட்டர் –ல் அங்கீகார குறியீடு பெற்ற நபர்கள் பணம் சம்பாதிக்கலாம் என்று ஒரு புதிய செய்தியை இவர் வெளியிட்டுள்ளார்.

ட்விட்டர்-ஐ எலான் மஸ்க் வாங்கிய பிறகு பல முடிவுகளை எடுத்து கொண்டு வருகிறார். அந்த வகையில் அங்கீகார குறியீடு பெறுவதற்கு மாதச் சந்தா திட்டத்தை எலான் மாஸ்க் அறிமுகப்படுத்தினார்.

10 லட்சத்திற்கு மேல் பின் தொடரும் கணக்குகளுக்கு கட்டணம் கிடையாது என்பதையும் கொண்டு வந்தார்.

மாதச் சந்தா செலுத்தும் பயனாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஒரு புதிய வழியை எலான் மஸ்க் அறிமுகப்படுத்தி உள்ளார். அங்கீகார குறியீடு பெற்றவர்களின் ட்வீகளுக்கு பதில்கள் வரும் இடத்தில் இனி விளம்பரங்களும் இடம் பெரும் என்று கூறி உள்ளார்.

சமூக வலைதளங்களில் விளம்பரம் வருவதால் பணம் சம்பாதிக்கலாம் என்பதற்கு ஏற்ப ட்விட்டர்-ல் வரும் விளம்பரத்தின் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை பயனாளர்களுக்கு கொடுக்கப்படும் என்று ட்விட்டர்-ன் புதிய நிர்வாகி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இதற்காக 41 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், ட்விட்டர்-க்கு தலைமை அதிகாரியாக லிண்டா பொறுபேற்க போகிறார் என்றும், பயனாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், விளம்பரம் மூலம் வருவாயை பெருக்கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.