மத்திய உள்துறை அமைச்சர் வருகையின் போது ஏற்பட்ட மின்தடை திட்டமிடப்பட்டதா? குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி!

0
105
sudden-power-outage-during-the-visit-of-union-home-minister-senthil-balaji-responded-to-the-accusation
sudden-power-outage-during-the-visit-of-union-home-minister-senthil-balaji-responded-to-the-accusation

மத்திய உள்துறை அமைச்சர் வருகையின் போது ஏற்பட்ட மின்தடை திட்டமிடப்பட்டதா? குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி! 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வரும் பொழுது கரண்ட் கட் ஆன விவகாரம் தற்செயலாக நடந்தது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேலூரில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று முன் தினம் இரவு சென்னை வந்து சேர்ந்தார். அப்போது தன்னை வரவேற்பதற்காக தொண்டர்கள் காத்திருந்ததால் அவர்களைப் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் விமான நிலைய வாயில் அருகே காரை நிறுத்த கூறி உள்ளார். அப்போது டிரைவர் காரை நிறுத்தியதும் அந்தப் பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டது.

ஆனாலும் காரை விட்டு இறங்கி சிறிது தூரம் நடந்து சென்று தொண்டர்களை பார்த்து அமைச்சர் அமித்ஷா கையசைத்தார். பின்னர் அவர் காரில் ஏறி கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு புறப்பட்டார். அவர் சென்றதும் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதோடு மட்டுமில்லாமல் திட்டமிடப்பட்டு மின்தடை ஏற்படுத்தியதாக கூறி போலீசார் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் மின்வெட்டு தொடர்பான அமித் ஷாவின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது,

அமைச்சர் வருகையின் போது மின்தடை ஏற்பட்டது தற்செயலாக நிகழ்ந்தது. வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தில் சிறிய அளவிலான மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தில் சிறிது மாற்றம் செய்துள்ளது. இதன் காரணமாகவே சென்னை விமான நிலையத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையின் போது மின் தடை தற்செயலாக நிகழ்ந்துள்ளது. அது உடனடியாக சரி செய்யப்பட்டதும் மின்சாரம் வழங்கப்பட்டது என்று தெரிவித்தார்.