அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை! ஓமன் மற்றும் நேபாளம் அணிகள் தகுதி!!
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடுவதற்கு ஓமன் மற்றும் நேபாளம் அணிகள் தகுதி பெற்றுள்ளது.
2007ம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்கப்பட்ட பிறகு இதுவரை 8 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. இதில் மேற்க்கிந்திய தீவுகள் அணி மற்றும் இங்கிலாந்து இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் தலா ஒரு முறை வென்றுள்ளது.
9வது உலகக் கோப்பை டி20 தொடர் அடுத்த ஆண்டு அதாவது 2024ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது. டி20 தொடர் தொடங்கிய பொழுது முதல் நான்கு சீசன்களில் 12 அணிகள் பங்கேற்றன. அதற்கு அடுத்த நான்கு ஆண்டுகளில் 16 அணிகள் டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றது. தற்பொழுது அடுத்த ஆண்டு(2024) நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் 20 அணிகள் பங்கு பெறவுள்ளது. இந்த 20 அணிகளில் ஏற்கனவே இந்தியா, பாகிஸ்தான் உள்பட 16 அணிகள் தேர்வாகி இருந்த நிலையில் தற்பொழுது ஓமன் மற்றும் நேபாளம் ஆகிய இரண்டு அணிகள் தேர்வாகி உள்ளது. எஞ்சிய இரண்டு இடங்களுக்கான அணிகள் இந்த மாதம் நடைபெறவுள்ள ஆப்பிரிக்கா குவாலிபையர் சுற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளது
முன்னதாக நடைபெற்ற போட்டியில் நேபாளம் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணியை வீழ்த்தி இறுதிப் பெட்டிக்கு முன்னேறியது. அதே போல ஓமன் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பஹ்ரைன் அணியையும் வீழ்த்தியது. இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஓமன் மற்றும் நேபாளம் அணி உலகக் கோப்பை டி20 தொடருக்கு தகுதி பெற்றது.
நேபாளம் அணி டி20 உலகக் கோப்பை தொடருக்கு இரண்டாவது முறையாக தகுதி பெற்றுள்ளது. இதற்கு முன்பாக 2014ல் நடைபெற்ற உலகக் கோப்பை டி20 தொடரில் விளையாடியது. அதே போல ஓமன் அணி மூன்றாவது முறையாக உலகக் கோப்பை டி20 தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. ஓமன் அணி 2016ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரிலும் 2021ம் ஆண்டு நடைபெற்ற டி20 தொடரிலும் விளையாடியது.
ஓமன், நேபாளம் உள்பட 18 அணிகள் உலகக் கோப்பை டி20 தொடருக்கு தேர்வாகி உள்ளது. அந்த 18 அணிகள் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, அயர்லாந்து, மேற்கிந்திய தீவுகள், அமெரிக்கா, பப்புவா நியூகினியா, ஸ்காட்லாந்து, கனடா, ஓமன், நேபாளம்