அண்ணாமலை அசந்த கேப்பில் பாஜகவின் முக்கிய புள்ளியை தன் பக்கம் இழுத்த எடப்பாடியார்!! அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே!!

0
34
#image_title

அண்ணாமலை அசந்த கேப்பில் பாஜகவின் முக்கிய புள்ளியை தன் பக்கம் இழுத்த எடப்பாடியார்!! அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே!!

தமிழக அரசியல் களத்தில் கடந்த சில மாதங்களாக பரபரப்பாக சூழல் நிலவி வருகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த அதிமுக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடனான கருத்து மோதல் காரணமாக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு இறுதியானது என்றும் இதில் எந்த ஒரு மாற்றுக் கருத்துக்கும் இடம் இல்லை என்றும் அதிமுக தலைமை திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

பாஜக உடனான கூட்டணி முறிவிற்கு பின்னர் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கட்சியை பலப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் சற்று சரிந்த அதிமுகவின் வாக்கு வங்கியை மீண்டும் உயர்த்தும் விதமாக புது புது முயற்சிகளை கையாண்டு மற்ற காட்சிகளுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் நீண்ட வருடங்களாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுவிப்பது தொடர்பாக சிறப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.

இதன் மூலம் இழந்த சிறுபான்மையினரின் ஓட்டுக்களை எடப்பாடியார் பெற்று விடுவார் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அடுத்த அதிரடியாக பாமக, தேமுதிக, விசிக கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார் என்று சொல்லப்பட்டது. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றி பிரகாசமாக இருக்கும் சூழலில் அக்கட்சியில் திமுக எம்.பி.திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா இணைய போகிறார் என்ற தகவல் தீயாய் பரவியது.

சூர்யா சிவா அவர்கள் ஏற்கனவே தமிழக பாஜகவில் ஓபிசி அணி தலைவராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் உட்கட்சி பூசல் காரணமாக அவர் பாஜகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட காரணத்தால் பாஜகவில் இருந்து விலகினார்.

அதன் பின்னர் எந்த கட்சியிலும் இணையாமல் இருந்த அவர் அதிமுகவில் இணைய போகிறார் என்ற தகவல் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியது. இதனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் உஷாராகி கொண்டு சூர்யா சிவா மீதான கட்சி ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்து மீண்டும் ஓபிசி அணி தலைவராக பதவியை அவருக்கு கொடுத்து இருக்கிறார். இதனால் எடப்பாடி பழனிசாமி திட்டம் நிறைவேறாமல் போயிற்று என்று எண்ணிய அண்ணாமலைக்கு பெரிய அதிர்ச்சியை எடப்பாடியார் கொடுத்து இருக்கிறார்.

தமிழக பாஜக ஓபிசி அணி மாநில செயலாளராக பதவி வகித்து வந்த தங்கராஜ் அவர்கள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இதனால் அண்ணாமலை எதிர்பார்க்காத நேரத்தில் பாஜகவின் முக்கிய புள்ளியாக இருந்த தங்கராஜை, எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஸ்கெட்ச் போட்டு தூக்கி விட்டார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.