நாமக்கல் மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் பலி! காரணம் இதுதான் சோகத்தில் அப்பகுதி மக்கள்!

0
174
Ninth class student killed in Namakkal district! This is the reason why the people of the area are sad!
Ninth class student killed in Namakkal district! This is the reason why the people of the area are sad!

நாமக்கல் மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் பலி! காரணம் இதுதான் சோகத்தில் அப்பகுதி மக்கள்!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ளதேவிபாளையத்தை  சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ஹரிக்குமார் (14). இவர் பரமத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். முருகேசன் அதே பகுதியில் உள்ள மகாலிங்கம் என்பவரது தோட்டத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வெளியே சென்ற மாணவன் ஹரிக்குமாரை  வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அவரது பெற்றோர் பல இடங்களில் தேடத் தொடங்கினர்.

மேலும் அப்போது அவர்கள் வசிக்கும் தோட்டத்தில் 5 ஆழ குழி ஒன்று தோண்டப்பட்டுள்ளது. தற்போது அதிகளவில் மழை பெய்து வருவதால் அந்த குழியில் மழை நீர் ஆனது தேங்கியிருந்தது. ஹரிகுமாரின் பெற்றோர் அந்த குழுவின் பக்கத்தில்  தேடிக் கொண்டிருந்தனர் அப்போது அந்த குழியினுள் ஹரிக்குமார் மூழ்கி பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் இந்த சம்பவம்  குறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த  தகவலின் பேரில்  போலீசார்  அந்த தோற்றத்திற்கு வந்து பின்னர் ஹரிகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில்  ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒன்பதாம் வகுப்பு மாணவன் குழியில் தேங்கிய  தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleபால்கர் மாவட்டத்தில்..நெஞ்சை உலுக்கிய கண்கலங்க வைத்த காட்சி!.விபத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்றும் முயற்சி!..
Next articleஇதிலிருந்து தான் தொற்று பரவுகிறது! அச்சத்தில் ஊர் பொதுமக்கள்! கண்டுகொள்ளாத அதிகாரிகள்!