தள்ளுபடியுடன் கார் வாங்கலாம்! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
பெரும்பாலான மக்களின் வாழ்நாள் கனவாக இருப்பது வீடும்,கார் வாங்குவதும் தான்.அந்த வகையில் அவர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியான ஒரு தகவலை மத்திய அரசு அறிவித்துள்ளது.சமீபத்தில் பட்ஜெட் தாக்கலின் போது ஆட்டோமொபைல் துறையினர் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்திருந்த வாகன அழிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.
ஆட்டோமொபைல் துறையினரிடம் இந்த அறிவிப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதனையடுத்து வாகன விற்பனையை அதிகரிக்க ஒவ்வொரு நிறுவனமும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.இந்நிலையில் தான் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது,ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பழைய வாகனங்களை கொடுத்து புதிய வாகனங்களை வாங்க நினைப்பவர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடி வழங்குவதாக அறிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.சுற்று சூழலை காக்கும் விதத்தில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தால் புதிய வாகனங்களுக்கு தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
மத்திய அரசின் இந்த வாகன அழிப்பு திட்டத்தின் மூலம் தனி நபர் வாகனங்கள் 20 வருடங்களுக்கும்,வர்த்தக வாகனங்கள் 15 வருடங்களுக்கும் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.