அதிமுக தலைமை வெளியிட்ட பரபரப்பான அறிவிப்பு! மகிழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள்!

0
70

தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில், தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தைகளிலும் மற்றும் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக இறங்கி வருகிறார்கள். அந்த வகையில், எதிர்க் கட்சியான திமுகவின் தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்குகளை சேகரித்து வருகின்றார்.
இந்த நிலையில், அந்தக் கட்சியின் சார்பாக சட்டசபை தேர்தலை முன்னிட்டு வரும் 14 ஆம் தேதி திருச்சி சிறுகனூர் பகுதியில் நடைபெற இருக்கும் ஒரு மிகப் பிரம்மாண்டமான மாநாட்டிற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அது சிறப்பு பொதுக் கூட்டமாக மாற்றப்பட்டது. அதன்படி தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் அந்தக் கட்சியின் முதல் பொதுக்கூட்டம் ஆனது திருச்சியில் நேற்றைய தினம் நடந்தது விடியலுக்கான விளக்கம் என்ற பெயரில் திமுக சார்பாக இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்துக்காக சுமார் 750 ஏக்கர் பரப்பளவில் சிறுகனூர் மைதானம் முழுவதும் தயாரானது.

அந்த கூட்டத்தில் பல்வேறு பரப்புரைகள் செய்யப்பட்டன. தமிழகத்தில் தற்போது இருக்கும் ஆட்சியில் எந்த துறையும் சரிவர செயல்படவில்லை ஆனால் அனைத்து துறைகளையும் வளர்ச்சி அடைய செய்வதே திமுகவின் நோக்கம். நீர் மேலாண்மை, சுகாதாரம், கல்வி ,நகர்ப்புற வளர்ச்சி நீதித்துறை, போன்றவற்றை வளர்ப்பதே எங்களுடைய முக்கிய பணி என்று தெரிவித்த ஸ்டாலின் அதற்கான அறிவிப்புகளையும் வெளியிட்டிருக்கின்றார்.அதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டத்தின் முக்கிய அறிவிப்பாக ஒவ்வொரு குடும்பத் தலைவிகளுக்கு மாதா மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை கொடுக்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டிருக்கின்றார். பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தின் கல்வி உதவித்தொகை இரண்டு மடங்காக அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு அதற்கான பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தாலும் தற்போது வரை உள்ளாட்சித் துறையில் எந்தவிதமான பணிகளும் சரிவர நடைபெறவில்லை. ஆகவே திமுக ஆட்சிக்கு வந்தவுடனேயே அது சம்பந்தமான பணிகள் முடுக்கி விடப்பட்டு தமிழ்நாட்டிலே உள்ளாட்சி அமைப்புகளின் பணிகள் சரிபார்க்கப்பட்டு நடைபெறும். அந்தவிதத்தில் தெருவிளக்கு மற்றும் தார்சாலை போன்றவை சரியாக இருக்கிறதா என்று கண்காணிக்கப்பட்டு அவற்றுக்கான பணிகளும் முடுக்கி விடப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.இந்தநிலையில், எதிர்கட்சியான திமுக இப்படி மிகப் பிரம்மாண்டமான ஒரு மாநாட்டை நடத்தும் என்று ஆளும் கட்சியான அதிமுக எதிர்பார்க்கவில்லை என்று சொல்கிறார்கள். அந்த விதத்தில் ஆளும் கட்சியான அதிமுக சார்பாக விரைவில் ஒரு மிகப் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடத்தப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. அந்த பொதுக்கூட்டத்தில் அதிமுகவின் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் பங்கேற்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வரவேற்கும் விதமாக இதேபோல ஒரு பொதுகூட்டம் நடைபெற்றது. ஆனால் அதனை மிஞ்சும் வகையில் இன்னொரு மிகப் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடத்தப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. அது திமுக தற்போது நடத்த திட்டமிட்டு இருக்கும் மாநாட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.