எவ்வளவு பயங்கர சளி இருமல் இருந்தாலும்!! ஒரே நாளில் சரி செய்யும் அற்புத மருந்து!!
இருமல் மற்றும் சளி ஆகியவை ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் பலமுறை பாதிக்கப்படும் பொதுவான நோய்களாகும். இந்த உலகில் உள்ள ஒவ்வொரு நபரும் பலமுறை இருமல் மற்றும் சளி பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்.
இருமல் மற்றும் சளி பிரச்சனை பெரும்பாலும் இளம் வயதினருக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. பலர் இருமல் மற்றும் சளியை லேசாக எடுத்துக்கொள்கிறார்கள், ஜலதோஷம் மற்றும் இருமல் முக்கியமாக ஒரு வாரத்தில் நம் உடலை விட்டு வெளியேறும்.
இருப்பினும், சிகிச்சையளிக்கப்படாத இருமல் மற்றும் சளி கடுமையான பிரச்சனையை உருவாக்கலாம் மற்றும் நம் உடலில் பல சிக்கல்களை ஊக்குவிக்கும். தொடர்ந்து இருமல் மற்றும் காய்ச்சல் காசநோய் மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு கடுமையான நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் பனியால் பலரும் சளி மற்றும் இருமல் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். வீட்டில் ஒருவருக்கு வந்தாலே குடும்பத்தில் அனைவரையும் தொற்றிவிடுகிறது.
சளி அல்லது காய்ச்சல் உண்டாகக் காரணமாக இருக்கும் நுண்ணுயிர்களான பக்டீரியா மற்றும் வைரஸ் போன்றவற்றால் ஏற்படும் தொற்று பாதிப்புகள் பெரும்பாலும், பெரியவர்களுக்கு ஏற்படும் இந்த வகை குறுகிய கால இருமலுக்கு காரணமாக உள்ளன.
இந்த சளி இருமல் பிரச்சனைகளை நமக்கு எளிதில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி மிக எளிதில் சரி செய்துவிட முடியும். இதற்காக மருத்துவரைதான் அணுக வேண்டும் என்ற அவசியம் இல்லை.
தேவையான பொருட்கள்
துளசி
இஞ்சி
மஞ்சத்தூள்
சீரகம்
மிளகு
தேன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ஒன்றை கிளாஸ் தண்ணீரை எடுத்துக் கொள்ளவும் அதில் ஒரு துளசியை சிறு சிறு துண்டுகளாக கிள்ளி போட்டுக்கொள்ள வேண்டும்.
அதன்பிறகு தோல் சீவியை இஞ்சியை நன்றாக நசுக்கி கொதிக்கும் தண்ணீரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன் ஒரு ஸ்பூன் மிளகு மற்றும் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நன்கு கொதித்து அந்த தண்ணீரில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கொதித்த அந்த தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொண்டு சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான அந்த தண்ணீரில் சுவைக்காக ஒரு ஸ்பூன் தேன் அல்லது கருப்பட்டியை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதனைத் தொடர்ந்து ஒரு வாரம் குடித்து வந்தால் சளி மற்றும் காய்ச்சல் இருந்த இடம் தெரியாமல் வெளியேறிவிடும்.