எந்தவிதமான இருமலாக இருந்தாலும் சரி! குணமாக உதவும் எளிய பாட்டி வைத்தியம் இதோ!
வறட்டு இருமலாக இருந்தாலும் சாதாரணமான இருமலாக இருந்தாலும் எப்பேர்பட்ட இருமலையும் குணப்படுத்த உதவும் பாட்டி வைத்தியம் செய்ய தேவையான பொருட்கள் பற்றியும் எவ்வாறு செய்வது என்பது குறித்தும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இருமலை குணப்படுத்தும் மருந்தை தயார் செய்ய தேவையான பொருட்கள்…
* கற்பூரவல்லி இலை
* துளசி இலை
* சின்ன வெங்காயம்
* உப்பு
* மிளகுத் தூள்
* எலுமிச்சை சாறு
இருமல் குணப்படுத்தும் மருந்து தயார் செய்யும் முறை…
முதலில் கற்பூரவல்லி இலையையும் துளசி இலையையும் சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சின்ன வெங்காயத்தை எடுத்து தோல் உரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் கற்பூரவல்லி இலை, துளசி இலை, சின்ன வெங்காயம் இவற்றுடன் சிறிதளவு உப்பு சேர்த்து இடிக்கவும். இவற்றை ஒன்றாக சேர்த்து இடிக்கும் பொழுது கிடைக்கும் சாற்றை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் எடுத்து வைத்துள்ள சாற்றில் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் மிளகுத் தூள் இவற்றை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இதோ இருமலை குணப்படுத்தும் மருந்து தயார்.
இந்த மருந்தை அப்படியே குடித்தால் எப்படிப்பட்ட இருமலாக இருந்தாலும் குணமாகி விடும். தொண்டையில் இருக்கும் சளி உடனே கரைந்து வெளியேறி விடும்.