என்ன செய்தாலும் பொடுகு போகவில்லையா! அதற்கு இந்த இரண்டு பொருட்கள் போதும் !!

Photo of author

By Sakthi

என்ன செய்தாலும் பொடுகு போகவில்லையா! அதற்கு இந்த இரண்டு பொருட்கள் போதும்
நமது தலையில் உள்ள பொடுகுத் தொல்லையை வெறும் இரண்டு பொருட்களை வைத்து முற்றிலுமாக எவ்வாறு போக்குவது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். மேலும் அந்த இரண்டு பொருட்கள் என்ன என்பது குறித்தும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொடுகுத் தொல்லை என்பது நம் தலையில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் ஒரு முக்கிய காரணியாக விளங்குகின்றது. இந்த பொடுகுத் தொல்லையை நீக்க பலவகையான ஷேம்புகள் மற்றும் மருந்துகள் வந்துவிட்டது. இதில் ஆங்கில மருந்துகளை விட நாம் வீட்டு மருத்துவ முறையை பயன்படுத்தும் பொழுது பக்க விளைவுகள் இல்லாத பாதிப்புகள் இல்லாத பலன்கள் அதிகம் கிடைக்கும்.
இந்த பொடுகு நம் தலையில் தங்கிவிட்டால் அரிப்பு, புண், முடி உதிர்தல், இள நரை போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதற்கு பின்னர் முடி உதிர்தலுக்கு தனியாக மருத்துவம், தலையில் ஏற்படும் அரிப்புக்கு மருத்துவம், இளநரையை மறைக்க மருத்துவம் என்று ஒவ்வொன்றுக்கும் ஒருவித மருத்துவ முறையை நாம் பயன்படுத்த வேண்டும்.
இதற்கு பதிலாக நாம் இந்த பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும் பொடுகுத் தொல்லையை நாம் குணப்படுத்திவிட்டால் மேற்கண்ட பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் நிம்மதியாக வாழலாம். அதற்கு நாம் வெறும் இரண்டு பொருட்கள்  பயன்படுத்தினால் போதும்.
பொடுகுத் தொல்லையை குணப்படுத்த உதவும் இரண்டு பொருட்கள்…
* மரிக்கொழுந்து
* வெந்தயக் கீரை
மரிக்கொழுந்து மற்றும் வெந்தயக் கீரை இந்த இரண்டு பொருட்கள் மட்டும் போதும். நாம் நம்முடைய தலையில் உள்ள பொடுகுத் தொல்லையை சரி செய்து விடலாம். இதற்கான செய்முறையும் எளிமையான ஒன்றுதான். அது பற்றி பார்க்கலாம்.
செய்முறை…
முதலில் ஒரு கப் அளவிற்கு மரிக்கொழுந்து எடுத்து கழுவி சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும். பின்னர் அரை கப் அளவிற்கு வெந்தயக் கீரையை எடுத்து அதையும் கழுவி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு மிக்சி ஜார் எடுத்து அதில் எடுத்து வைத்துள்ள மரிக்கொழுந்து, வெந்தயக் கீரை இரண்டையும் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். இதோ பொடுகுத் தொல்லையை நீக்க உதவும் மருந்து தயார்.
இந்த மருந்தை தலையில் பேக் மாதிரி போட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் 10 நிமிடங்கள் அப்படியே விட்டு கழுவி விட வேண்டும். தலையை நன்கு அலசி கழுவி விட்டால் தலையில் உள்ள பொடுகுத் தொல்லை மறையாத தொடங்கும்.