இனி கட்டணமே தேவை இல்லை!! பத்திரப்பதிவுத்துறை அதிரடி அறிவிப்பு!!
குறுகிய காலத்திற்குள் வருமான வரியை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை எனில் அந்த சார் பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பத்திரப் பதிவுத்துறை தலைவர் கூறி இருந்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இவர், ஒவ்வொரு ஆண்டும் முடிவடைந்த பின்னர் ரூபாய் முப்பது லட்சத்திற்கும் மேலான ஆவணங்கள், விற்பவர், வாங்குபவர், ஆதார் என், பாண் எண், சொத்தின் தன்மை, சொத்தினுடைய மதிப்பு போன்றவற்றை வருமான வரித்துறை இணையத்தில் பதிவு அலுவலர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
எனவே, பதிவேற்றம் செய்வதற்கு முன்பாகவே அதற்கான தகவல்களை ஆவணதாரர்களிடமிருந்து பெரும் வகையில் புதிய பத்திவுத்துறையின் ஸ்டார் 2.0 கொண்டு வரப்பட்டுள்ளது.
அனைத்து சார் பதிவாளர்களும் வருமான வரி விவரங்களை உரிய நாட்களுக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது புதிய பரிணாமத்தில் “ஸ்டார் 2.0” திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இனி பதிவுத்துறையில் அனைத்து சேவைகளுமே இணையதளம் வழியாக வழங்கப்படும்.
மேலும், தற்போது வில்லங்க சான்றுகளை இணையவழியில் பதிவிறக்கம் செய்யும் வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது. வில்லங்க சான்றிதழ்களை இணைய வழியில் பொதுமக்கள் பார்வைக்காகவும், அதை பதிவிறக்கம் செய்யவும் அட்டவணை – II பதிவேட்டினை ரூபாய் 36.58 கோடி மதிப்பில் கணினியில் மேலேற்றம் செய்வதற்கு நிர்வாகமானது அனுமதி மற்றும் நிதி ஒத்துக்கீட்டை அளித்து அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதாவது, 1950 முதல் இன்று வரை உள்ள வில்லங்க சான்றிதழ்களை இணையதளத்தில் பார்வையிடவும், அதை கட்டணம் இல்லாமல் பதிவிறக்கம் செய்யவும் முடியும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.