இனி இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வீட்டுபாடம் கிடையாது?
பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு..
ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என்று சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.இதனை முறையாக அமல்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதில் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக புத்தகச் சுமை தரக்கூடாது எனவும் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் பரிந்துரைக்கின்றது. அதன்படி ஒன்று மட்டும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒன்றரை கிலோ புத்தகச் சுமையும் , மூன்று நான்கு ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு முதல் மூன்று கிலோ புத்தக சுமையும் ஆறு முதல் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு 4 கிலோ புத்தகம் சுமையும், எட்டு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு 4 முதல் 5 கிலோ புத்தக சுமையும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஐந்து கிலோ புத்தக சுமையும் உள்ளது.
இதை தவிர கூடுதல் புத்தகங்கள் பொருட்களைக் கொண்டு வருமாறு மாணவர்களை வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் வற்புறுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்திவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கண்டிப்பாக வீட்டுப்பாடம் கொடுக்கவே கூடாது என்று அதில் தெளிவாக எச்சரித்துள்ளது.
வீட்டுப்பாடம் தரப்படுவதில்லை என்பதை பறக்கும் படையினர் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. ஆய்வுக்குப் பின் வீட்டுப்பாடம் தரப்பட்டதா? இல்லையா?என்ற அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து விளையாடுவது குறிப்பிடத்தக்கது.