ஒற்றைத் தலைவலியா? உடனே குணமாக இதனை ட்ரை பண்ணுங்கள்!
தற்போதுள்ள சூழலில் நாம் அனைவரும் அதிகளவு செல்போன், டிவி பயன்படுத்தி வருவதனாலும். ஒரு சிலர் வேலை நிமிர்த்தம் காரணமாக காலையிலிருந்து மாலை வரை லேப்டாப் போன்றவைகளில் வேலை செய்வதனாலும் ஒற்றைத் தலைவலி அல்லது தலைவலி ஏற்படுகிறது.
மேலும் தலைவலி என்பது ஒவ்வொருவரின் உடல் நிலையை பொருத்ததாகும். ஒருவருக்கு உடல் சூட்டினாலும் ஏற்பட வாய்ப்புள்ளது. தலை வலி வராமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் இஞ்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இஞ்சியில் நீர்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும் இதில் விட்டமின் பி12,விட்டமின் ஏ, விட்டமின் சி , போன்றவைகள் இருக்கின்றது.சோடியம், இரும்புச்சத்து, கால்சியம் ,பொட்டாசியம், சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் தன்மை போன்றவைகள் இஞ்சியில் இருக்கின்றது.
முதலில் இஞ்சியை தோலுடன் சேர்த்து நன்கு சீவி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதனை நன்கு வடிகட்டி கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை ஒற்றை தலைவலி இருக்கும் இடத்தில் தேய்த்தால் முற்றிலும் குணமாகும்.
மேலும் தலைவலி குறையாமல் அதிகரித்து வந்தால் இஞ்சியை நன்கு அரைத்து அந்த விழுதினை தலையில் பத்து போட வேண்டும். தலைவலி ஏற்படும் ஆரம்ப கட்டத்திலேயே சரி செய்து கொண்டால் கண் பிரச்சனைகள் வருவதை தடுக்கலாம்.