இனி மால்களில் நோ பார்க்கிங் சார்ஜ்! உயர் நீதிமன்றத்தின் முக்கிய தகவல்!

0
153
No more parking charges! Important Information of the High Court!
No more parking charges! Important Information of the High Court!

இனி மால்களில் நோ பார்க்கிங் சார்ஜ்! உயர் நீதிமன்றத்தின் முக்கிய தகவல்!

இந்த காலத்தில் நகர மக்கள் பெரும்பான்மையோர் சினிமா மால் போன்றவற்றிலேயே நேரம் செலவழிக்கின்றனர். அவ்வாறு செல்லும் மக்கள் பலர் சில காரணங்களால் அவதிப்படுகின்றனர். அதில் ஒன்றுதான் பார்க்கிங் சார்ஜ். பொதுமக்கள் தங்களின் நேரத்தை செலவழிக்க மால்களுக்கு செல்கின்றனர். மால் என்பது பொதுவான இடம். வாங்க வரும் நபர்களுக்கு அவர்களே வண்டிகளை பார்க்கிங் செய்ய இடம் ஒதுக்க வேண்டும். இவ்வாறு இருக்கையில் சில மால்களில் பார்க்கிங் சார்ஜ் என்று வசூலித்து வருகின்றனர். இதனை கண்டிக்கும் வகையில் கேரளாவில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

மலையாள இயக்குனர் பாலு வடக்கன் என்பவர் கடந்த டிசம்பர் மாதம் தனியார் வானொலி ஒன்றுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மால் பாதுகாவலர் பார்கிங் சார்ஜ் 20 கட்டணம் செலுத்தும் படி கேட்டுள்ளார். ஆனால் இயக்குநரும் கட்டணத்தை தர மறுத்துள்ளார். இயக்குனர் கட்டணத்தை தர மறுத்ததால் அம்மா லீலை புரிந்த பணியாளர் அவரை வெளியே செல்ல முடியாதபடி கதவை மூடி உள்ளனர். இதை தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றத்தில் இயக்குனர் பாலி வடக்கன் இதுபற்றி வழக்குப்பதிவு செய்தார். பின்பு அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் இயக்குனர் பாலி வடக்கன் வழக்கறிஞர், மால் என்பது பொதுவான ஒன்று அங்கு வரும் பார்வையாளர்களுக்கு இருக்கும் பொதுவான இடம் அதற்கென்று தனியாக பணம் வாங்கக்கூடாது.

மேலும் பார்க்கிங் சார்ஜ் என்று கட்டணம் வசூலிக்கலாம் என எந்த ஒரு சட்ட விதிகளும் இல்லை. அவ்வாறு இருக்கையில் இவ்வாறானவர்கள் பணம் வாங்குவது சட்ட விரோதமானது என அவர் கூறினார். பெண்கள் அந்த தனியார் மால் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் மால் நிறுவனத்துக்கு வழக்கறிஞராக ரீகுமார் என்பவர் ஆஜரானார். முனிசிபாலிட்டி சட்டத்தின் கீழ் தனியார் நிறுவனத்துக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது என கூறினார். பின்பு இந்த வழக்கு ஜனவரி 14-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதி கூறியதாவது, களமசேரி முனிசிபாலிட்டி நிலை என்பது உறுதியாக தெரியவில்லை.

அதனால் அவர்கள் தெளிவான விளக்கம் மற்றும் நிலைப்பாட்டை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறினார். பின்பு சட்ட விதிகளின்படி பார்க்கிங் பகுதி என்பது ஒரு கட்டடத்தின் கட்டாயம் இருக்க வேண்டும். இப்படி கட்டப்படும் கட்டடத்தின் உரிமையாளர் பார்க்கிங் வசதிக்கென்று கட்டணம் வசூலிக்கலாமா என்பது தான் இப்போதைய கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் அவ்வாறு வசூலிப்பது சாத்தியமில்லை என்பதுதான் என்னுடைய கருத்து என கூறியுள்ளார். தற்போதைய நிலையில் பார்க்கிங் சார்ஜ் வசூலிக்க தடையில்லை என கூறியுள்ளனர். நாளடைவில் அவ்வாறு வசூலிப்பது தடை செய்வதற்கான உத்தரவு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleதொடரும் போலீஸ் அராஜகம்! சட்டக்கல்லூரி மாணவனை நிர்வாணமாக வைத்து விடிய விடிய காவல் அதிகாரி செய்த வெறி செயல்!
Next articleசேலத்தை அச்சுறுத்தும் கொரோனா! இந்த மாவட்டத்தில் ஊரடங்கு?